டிஸ்னி பொம்மைகள் சேகரிப்பில் சாதனை படைத்த பெண்: லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்!
1,350க்கும் மேற்பட்ட டிஸ்னி நிறுவனம் பொம்மைகளை சேகரித்து சாதனை படைத்த பெண்மணி.
ஒவ்வொரு மனிதர்களுக்கும் தான் பிடித்த விஷயங்களை செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். அதை யார் தடுத்தாலும் செய்வதை நிறுத்த மாட்டார்கள். சிலருக்கு சிலவற்றை சேகரிப்பது பிடிக்கும்? மற்ற சிலருக்கு சில புத்தகங்களைப் படிப்பது பிடிக்கும்? என ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விஷயங்கள் பல உள்ளன. அந்த வகையில் தற்போது கேரளாவில் பிறந்து சிங்கப்பூரில் வசித்து வரும் தொழில் அதிபரான ரிஸ்வானா கஹோரி என்ற 33 வயதான பெண்மணிக்கு டிஸ்னி நிறுவனத்தின் பொம்மைகளை சேகரிப்பது மிகவும் பிடிக்குமாம். மேலும் இவர் தன்னுடைய சிறுவயதில் இருந்தே இத்தகைய டிஸ்னி பொம்மைகளை சேகரித்து வருவதாகவும் பல சுவாரஸ்ய தகவல்களை கூறுகிறார்.
நீங்கள் கேட்கலாம்? பொம்மைகள் தானே அதை யார் வேண்டுமானாலும் சேகரிக்கலாம்? என்றுதான். ஆனால் இவர் சேகரித்துள்ள பொம்மைகள் உலகில் சில எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்பட்டு மற்றும் சில நபர்களால் அதிக விலை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்டதாம். குறிப்பாக டிஸ்டி நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்களில் இடம்பெறும் தனித்தன்மை கொண்ட கதாபாத்திர பொம்மைகளை தான் இவர் சேகரித்து வைத்துள்ளாராம். மேலும் தன்னுடைய சிறுவயதில் இருந்தே இவற்றை இவர் செய்து வருகிறார். இதனால் இவர் கிட்டத்தட்ட ஆயிரத்து 350க்கும் அதிகமான டிஸ்னி நிறுவனத்தின் பிரபலமான கதாபாத்திரத்தின் பொம்மைகளை வைத்துள்ளார்.
இவை தற்போது லிம்பா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இடம்பெற்றுள்ளது. மேலும் இவர் தான் தற்பொழுது வேர்ல்டு ரெக்கார்டுக்கு முயற்சி செய்து வருவதாகவும் கூறியுள்ளார். இந்த பணியை கடந்த 25 வருடங்களாக இவர் செய்துள்ளார் இதற்கான இவர் ஒரு தனி அறை ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளாராம். டிஸ்னி நிறுவனத்தினால் உருவாக்கப்படும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தனித்துவம் கொண்டது. அந்த நிறுவனத்தின் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானது. எனவே இவர் சிறுவயதில் இருந்து, டிஸ்னி நிறுவனத்தின் கதாபாத்திரத்தில் இருக்கும் பொம்மைகளை வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தொடங்கிய பழக்கம் தற்போது பெரிய அளவில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் இவர் சேகரித்துள்ள பொம்மைகளின் மதிப்பு கிட்டத்தட்ட மூன்று கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
Input & Image courtesy: News 18