நடுவானில் பறந்த விமானத்தில் கேரள முதல்வர் பினராயிக்கு வந்த சோதனை - விஸ்வரூபம் எடுக்கும் காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் மோதல்!

Update: 2022-06-14 05:08 GMT

கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் பயணித்த விமானத்திற்குள் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். இது திட்டமிட்ட வன்முறை முயற்சி என பினராயி குற்றம் சாட்டிள்ளார். இதனைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது.

இளைஞர் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.எஸ்.சபரிநாதன், சமூக வலைதளங்களில் மூன்று வினாடிகள் வீடியோவை வெளியிட்டார். அதில் இரண்டு பேர் விஜயனை ராஜினாமா செய்யக் கோரி முதலமைச்சருக்கு எதிராக முழக்கங்களை எழுப்புவதையும், முதலமைச்சருடன் வந்த ஒரு நபர் அவர்களைத் தள்ளுவதையும் வீடியோவில் காணலாம். 

தங்க கடத்தல் விவகாரத்தில் முதல்வர் பினராயி விஜயனுக்கும், அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் தனது வாக்குமூலத்தில் கூறியிருந்தார்.

இதையடுத்த் முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி உட்பட எதிர் கட்சிகள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

Similar News