கேரளாவின் பாரம்பரியமாக புட்டில் ஐஸ்கிரீம்: உலகளாவிய அளவில் வைரல்!

கேரளாவின் பாரம்பரிய உணவான புட்டில் செய்யப்படும் ஐஸ்கிரீம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Update: 2022-01-30 14:15 GMT

இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு நகரங்களிலும் அந்த நகரங்களுக்கு என்ற தனிச்சிறப்பு மிக்க உணவு இடம்பெறுகின்றது. குறிப்பாக அந்த இடத்தில் தயாரிக்கப்படும் உணவிற்கு உலகளாவிய அளவில் கிராக்கி இருந்து வருகின்றன. மேலும் அதை சாப்பிடுவதற்காக உணவு விரும்பிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது கேரளாவின் பாரம்பரிய உணவாக இருந்து வரும் புட்டு பாத்திரத்தில் செய்யப்படும் ஐஸ்கிரீம் உலகளாவிய அளவில் சமூக வலைதளங்கள் மூலம் வைரலாகி வருகிறது. உணவு விரும்பியான ஒருவர் இதனை சமூக வலைதளங்களில் பதிவிட்ட வீடியோ ஒன்று, தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகிறது. 


கேரளாவில் உள்ள பலூடா ஐஸ்கிரீம் பார்லரில் தான் இந்த புட்டு ஐஸ்கிரீம் கடந்த ஆண்டு ஓணம் பண்டிகையை ஒட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இந்த கடையில் செய்யப்படும் பிரத்யக ஐஸ்கிரீம் வகைகளில் ஒன்றாக இது கண்டறியப்படுகிறது மேலும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வீடியோ மூலம் இந்த புட்டு ஐஸ்கிரீம் தற்போது வைரலாக பரவி வருகிறது. இப்போது புட்டு ஐஸ்கிரீம் என்பது புட்டு செய்யப்படும் பாத்திரத்தில் ஐஸ்க்ரீம் தயாரிக்க படும் பாத்திரத்தில் தயார் செய்யப்படுகிறது. இது புட்டு வடிவத்திலும் இவர்கள் பரிமாறுகிறார்கள். ஐஸ்கீரிம் மீது கான்பிளக்ஸ், உலர்ந்த பழங்கள், சாக்லெட் போன்ற பலவும் ஐஸ்கிரீம் புட்டின் மீது ஊற்றப்பட்டு கடைசியில் பரிமாறப்படுகிறது. 


இதன் ஆரம்ப விலை 100 ரூபாய் இருந்து ஆரம்பித்து இறுதியாக 500 ரூபாய் வரையிலும் இதன் விலை உயர்கிறது. மேலும் வாடிக்கையாளர்கள் கேட்பதற்கு ஏதுவான வகையில் அவர்கள் டெக்கரேஷன் செய்து தருகிறார்கள். இதுதொடர்பாக யூடியூப் வைத்திருப்பவர்கள் மற்றும் Foodie's என்றழைக்கப்படும் உணவு விரும்பிகள் பலரும் இந்தக் கடைகளுக்கு சென்று தற்போது தன்னுடைய அனுபவங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

Input & Image courtesy: News 18

Tags:    

Similar News