கோவை பாரதியார் பல்கலைக்கழகம்: மாணவிகள் முற்றுகை போராட்டம் ஏன்?

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் மாணவிகள் முற்றுகை போராட்டம் நடத்தியதற்கான காரணம் என்ன?

Update: 2022-03-31 13:51 GMT

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாணவிகள், விடுதியில் பாதுகாப்பு இல்லை எனவும், ஐந்து ஆண்கள் அடிக்கடி விடுதிக்கு வருகை தருவதாகவும் பல்வேறு விடுதியில் பயிலும் மாணவிகள் குற்றஞ்சாட்டினர். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள, மாணவியர் விடுதிக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி பல்கலைக்கழக மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


மருதமலை சாலையில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள விடுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி தங்களுடைய கல்லூரி படிப்பை மேற்கொண்டு வருகிறார்கள். இத்தகைய ஒரு சூழ்நிலையில் கடந்த சில வாரம் மர்மநபர்கள் கல்லூரி விடுதிக்குள் வருவதாகவும், மேலும் அவர்கள் ஆயுதங்களுடன் வளாகத்தில் சுற்றி வருவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். இதுபற்றி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் நேற்று இரவு மீண்டும் மாணவியர் விடுதிக்குள் புகுந்த 5 மர்ம நபர்கள் புகுந்துள்ளனர். அதில் ஒருவர் நிர்வாணமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் இதனை கண்டித்து பல்கலைக்கழக விடுதியில் தங்கி பயின்று வரும் மாணவிகள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து பல்கலைக்கழக நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பல்கலைக்கழக விடுதியில் தங்கி பயின்று வரும் மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இதன்பின்னர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வருகை தந்து மாணவிகளுக்கு பாதுகாப்பிற்காக குழு அமைக்கப்படும் என்றும் என் கல்லூரி வளாகத்தை சுற்றி விளக்குகள் அமைத்து தருவதாக உறுதியளித்தார். பின்னர் மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு வகுப்பறைகளுக்கு சென்றனர். 

Input & Image courtesy: Indian Express

Tags:    

Similar News