பள்ளி புத்தகங்களில் திருக்குறளின் 108 அதிகாரங்கள் - உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?
பள்ளி புத்தகத்தில் திருக்குறள் அதிகாரங்கள் இடம் பெற வேண்டும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு.
திருக்குறளில் 108 அதிகாரங்களை பள்ளி புத்தகத்தில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஏற்கனவே இருந்த உத்தரவை முறையாக நடைமுறைப்படுத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவிட்டது. மதுரை சேர்ந்த ராம்குமார் தாக்கல் செய்த மனுவில் கடந்த 2016 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் திருக்குறளில் உள்ள அதிகாரங்களில் உள்ள 150 திருக்குறள்களை ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு முழுமையாக பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.
இதை எடுத்து கடந்த 2017ல் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. கடந்த 2016 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் திருக்குறளில் உள்ள 108 அதிகாரங்களில் உள்ள 1050 திருக்குறள்களை ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு முழுமையாக பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. அதில் திருக்குறள் ஆகிய 108 அதிகாரங்களில் உள்ள 1050 குறட்பாக்கள் இடம்பெற வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது, ஆனால் அது நடைபெறவில்லை. ஆனால் பள்ளி பாடப் புத்தகத்தில் பேரளவு மட்டுமே திருக்குறள் இடம் பெற்றுள்ளது.
அதன் பொருள் விளக்கம் அளிக்கப்படவில்லை. மாணவர்களுக்கு தேர்வு எழுதும் பொழுது திருக்குறள் பெயரளவில் மட்டுமே இடம்பெறுகிறது. அது குறித்த பொருள் தெளிவாக விளக்கப்படவில்லை என்று மனு முன்வைக்கப்பட்டு இருந்தது. எனவே திருக்குறளில் அருட்பார் பொருட்பால் ஆகியவற்றில் 108 அதிகாரங்களில் உள்ள 1050 திருக்குறள்களை பொருளுடன் சேர்த்து இடம்பெற வேண்டும். தேர்வுகளில் திருக்குறள் தொடர்பான கேள்விகள் இடம் பெற வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டு இருந்தது. அது தொடர்பான அறிக்கை மூன்று மாதங்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறது.