சினிமா பாணியில் தன் ஜோடியை கொன்றவரை 7 முறை தாக்கிய பாம்பு

தன் ஜோடியை கொன்றவரை 7 முறை தீண்டியது பாம்பின் பழிவாங்கும் செயலா இது?

Update: 2022-04-19 14:08 GMT

நம் தெரியாத வகையில் இணை சேரும் பாம்புகளை பிரித்து, அவற்றுள் ஒரு பாம்பை கொன்று விட்டால் அவை பலிவாங்க செயல்படும் என்று கட்டுக்கதைகளும் கூறப்படுகிறது. பாம்பு இச்சாதாரி என்ற நிலையை அடைய கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் தவம் இருக்க வேண்டும். அப்போது தான் அத்தகைய வல்லமை கிடைக்கும் என்பது போல கதையில் சொல்லப் பட்டிருக்கும். மேலும் பல்வேறு கதைகளில் கூட பாம்பு பழி வாங்குவது போன்று காட்டப்பட்டிருக்கும். அந்த வகையில் தற்பொழுது உத்தரபிரதேசத்தில் இது போன்ற ஒரு உண்மைச்சம்பவம் நடந்து உள்ளது. தனது ஜோடியை கொன்றவரை 7 முறை ஒரே பாம்பு கடித்து உள்ளது.


இதில் அந்த மனிதர் 7 முறையும் உயிர் பிழைத்து உள்ளார் என்பதுதான் பெரிய விஷயமாக உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மாநிலம் ராம்பூர் மாவட்டம் ஸ்வார் தெஹ்சில் மிர்சாபூர் பகுதியில் எஹ்சான் என்பவர் விவசாய பண்ணையில் வேலை செய்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் தன் வீட்டில் விவசாய வேலைகளை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு இரண்டு பாம்புகள் பின்னி பிணைந்து கொண்டிருந்தது. இதை பார்த்ததும் எஹ்சான் அந்த ஜோடியில் ஆண் பாம்பை கொன்று விட்டார். பெண் பாம்பு உடனே அங்கிருந்து தப்பி எங்கேயோ சென்றுவிட்டது.


இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவர் வீட்டில் இருந்தபோது வீட்டிற்குள் எப்படியோ வந்த பாம்பு இவரை தீண்டியுள்ளது. அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் உயிர் பிழைத்து வீட்டுக்கு வந்தார். ஆனால், மறுபடியும் அதே பாம்பு அங்கு வந்து, அவரை மீண்டும் அவரை கடித்துவிட்டது.. இப்படியே ஒரே பாம்பு மொத்தம் 7 முறை கடித்துள்ளது. 7 முறையும் உயிர் தப்பி உள்ளார். 7முறையும் அக்கம்பக்கத்தினர்தான் இவர் உயிரை காப்பாற்றியுள்ளனர். 7 முறை இவரை தீண்டிய பாம்பு அந்தப் பெண் பாம்புதான் என்பது அக்கம்பக்கத்தினர் கூறுகிறார்கள் மேலும் பாம்பு பழிவாங்கும் விதமாக இவரை தாக்கி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. 

Input & Image courtesy: Malaimalar News

Tags:    

Similar News