ஐயா! ஸ்டாலின் ஐயா! போன வாரம் அப்பா... இந்த வாரம் அம்மா! ஏதாச்சும் பண்ணுங்க - அரசு மருத்துவமனையில் அனாதையாக கதறும் வாலிபர்.!

கொரோனா வார்டில் மருத்துவர்கள் யாரும் இல்லாததால் தாய் உயிரிழந்துவிட்டதாக அவரது மகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Update: 2021-10-07 00:30 GMT

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் மருத்துவர்கள் யாரும் இல்லாததால் தாய் உயிரிழந்துவிட்டதாக அவரது மகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வீரராகவன் தெருவைச் சேர்ந்த கோதண்டராமன்- செந்தாமரை செல்வி தம்பதியர் செப்டம்பர் 24ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால், இம்மாதம் ஒன்றாம் தேதி கோதண்டராமன் உயிரிழந்தார்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1.45 மணியளவில் செந்தாமரை செல்விக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், அப்போது மருத்துவர்கள் யாரும் இல்லாததால் தனது சகோதரி அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்ததாகவும் அவர் அவரது மகன் சீனிவாஸ் தெரிவித்துள்ளார்.

மின்சாரம் இருந்தும் ஆக்சிஜன் இயந்திரம் செயல்படவில்லை என சீனிவாஸ் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், கடலூர் மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

வீடியோவில், "போன வாரம் தான் அப்பாவை இழந்தேன். இந்த வாரம் அம்மாவையும் இழந்துவிட்டேன். ஸ்டாலின் ஐயா, ஏதாவது பண்ணுங்க எனக்கதறும் காட்சி மனதை உருக வைக்கிறது.




Full View
Tags:    

Similar News