மக்கள் என்ன உங்கள் அடிமைகளா? தீர்வு கேட்டு வந்த பெண்ணை அடித்த அமைச்சர்! 48 மணி நேரத்தில் பதவி விலகச் சொல்லி அண்ணாமலை காட்டம்!

Update: 2022-07-13 05:03 GMT

விருதுநகரில் குறைகூற வந்த பெண்ணை வருவாய்துறை அமைச்சர் அடித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.விருதுநகர் அருகே பாலவநத்தத்தில் இலவச ஆடு வழங்கும் திட்ட நிகழ்ச்சியில் வருவாய்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பங்கேற்றார். அதே ஊரை சேர்ந்த கலாவதி அமைச்சரிடம் மனு அளிக்க வந்தார்.

மனுவில், எனது குடும்பம் கஷ்டத்தில் வாடுகிறது. வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டும் என தெரிவித்து இருந்தார். அப்போது அவர் கையில் வைத்திருந்த மனுவை வாங்கி அந்த மனுவால் அப்பெண்ணை அடித்தார். இந்த சம்பவம் வீடியோவாக வைரலானது. இது குறித்து தி.மு.க., தரப்பில் விசாரித்த போது, 'மனு கொடுக்க வந்த பெண் அமைச்சருக்கு  உறவினர் முறை என்பதால், அவரை செல்லமாக தட்டிப் பேசியதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மக்கள் என்ன உங்கள் அடிமைகளா. விருதுநகர், பாலவனத்தம் கிராமத்தில், தீர்வு தேடி வந்த ஏழைத்தாயை அடித்த வருவாய் துறை அமைச்சர்ராமச்சந்திரன், அடுத்த, 48 மணி நேரத்திற்குள் பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால் அவரது வீட்டை, தமிழக பா.ஜ.க முற்றுகையிடும் என தெரிவித்துள்ளார்.


Similar News