கிராம மக்களிடம் தடித்த வார்த்தையை உபயோகித்தல் - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பொன்முடி!

போராட வந்த கிராம மக்களிடம் கடினமான தடித்த வார்த்தைகளை உபயோகித்தால், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

Update: 2022-11-03 12:30 GMT

தி.மு.கவின் 15 ஆவது பொதுக்கூட்டத்தின் போது தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே கட்சியில் இருக்கும் முக்கிய நபர்களின் பேச்சு வழக்கு காரணமாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாக குறிப்பிட்டு இருக்கிறார். குறிப்பாக அவர் கூறுகையில், "மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல ஒரு பக்கம் முதல்வர் என்ற முறை, மற்றொரு பக்கம் கட்சி தலைவர் என்ற முறையில் செயல்பட வேண்டி இருக்கிறது. காலையில் எழுந்ததும் நம்மவர் எந்த ஒரு புதிய பிரச்சினையை உருவாக்கி இருக்கிறார்கள் என்பது உடனே நான் எழுந்திருக்க வேண்டி இருக்கிறது என்று கூறி இருக்கிறார். இதற்கு காரணம் கட்சியில் இருக்கும் சில முக்கியமான தலைவர்களின்  சர்ச்சையான பேச்சு, செயல்பாடுகள் காரணமாக தான்.


அந்த வகையில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் ஏற்கனவே சில பிரச்சினைகளில் சிக்கி இருக்கிறார். குறிப்பாக பெண்கள் இலவச பேருந்து பயணத்தை "ஓசியில் தான் பயணம் செய்கிறீர்கள் " என்பது போன்று கூறுகிறார். மேலும் முகையூர் ஒன்றிய குழு பெண் தலைவரை பார்த்து, "ஏமா நீ எஸ்.சி தானே?" என்று கேள்வி கேட்டிருக்கிறார். இதுபோன்ற பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பேசியிருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது மு.க.ஸ்டாலின் அவர்களின் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சித்தலிங்கம் மடம் ஊராட்சியை இரண்டாக பிரிப்பதற்கான வேலையை வருவாய்த்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.


ஆனால் அங்குள்ள மக்கள் இவற்றை எதிர்த்து  கொட்டும் மழையில் போராட்டம் நடத்துகிறார்கள். இந்த போராட்டத்தில் மக்களுக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண அமைச்சர் அங்கு சென்று இருக்கிறார். அங்கு பேச்சு வார்த்தை முற்றி வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கும் பொழுது, தனக்கு பின் நின்ற நபரை பார்த்து தடித்த வார்த்தைகளில் திட்டி இருக்கிறார். இந்த ஒரு வீடியோ காட்சிகள் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Input & Image courtesy: Vikatan

Tags:    

Similar News