50 ஆண்டுகளில் முடியாததை 8 ஆண்டில் சாத்தியம் ஆக்கிய மோடி அரசு: எப்படி தெரியுமா?
டிஜிட்டல் பயன்பாட்டில் 50 ஆண்டுகளில் அடைய வேண்டிய நிலையை கடந்த 8 ஆண்டுகளில் அடைந்துள்ளோம் என்று கூறினார் தமிழக ஆளுநர்.
டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா மற்ற நாடுகளை விட முதன்மையாக உள்ளது என்றும், பணப்பரிவர்த்தனை மட்டுமின்றி மற்ற சேவைகளிலும் டிஜிட்டல் பயன்பாட்டில் 50 ஆண்டுகளில் அடைய வேண்டிய நிலையை கடந்த 8 ஆண்டுகளில் அடைந்துள்ளோம் என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ளதால், ’பெண்கள் தலைமையிலான நாடு’ என்பதை பிரதமர் நோக்கமாக கொண்டுள்ளார் எனவும், நாட்டில் உள்ள பெண்களில் 80% பேர் வங்கி கணக்கு வைத்துள்ளனர் எனவும் தெரிவித்த அவர், 2047 லிலும் இந்தியா அதிக இளம் தலைமுறையினரை கொண்ட நாடாக இருக்கும் என்றார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மேலும் பேசும் போது கூறுகையில், தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம் 7000 ஆண்டுகள் பழமையானது என்றும், இயற்கையோடு மனித குலம் மோதலை கடைபிடித்ததால், பல்வேறு பருவ கால பாதிப்பை சந்தித்து வருகிறோம் என்றும் கூறினார். ஆங்கிலேயர்கள் இந்தியாவிலிருந்து வெளியேறும்போது ஏற்பட்ட பஞ்சத்தை நம் விஞ்ஞானிகள் அதனை மிக குறுகிய காலத்திலேயே சரி செய்தனர் என்று பேசினார்.
வளர்ந்த நாடுகள் கூட கொரோனா காலத்தில் கொரோனாக்கான தடுப்பூசியின் விலையை அதிகரித்தது. ஆனால், இந்தியா 200 நாடுகளுக்கும் மேல் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கியது என்றார். இந்தியாவை மத்திய அரசு ஒரே குடும்பமாக பார்க்கிறது. அரசியல், மொழி கடந்து அனைவரும் சமம் என பிரதமர் பார்க்கிறார். இதனால் தான் மிகப்பெரிய மாற்றத்தை இந்தியாவில் மத்திய அரசால் நிகழ்ந்த முடிந்தது என்று தெரிவித்தார்.
Input & Image courtesy:News