ஆசிய சிங்கங்களின் தாயகமாக விளங்கும் இந்தியா : பிரதமரின் பெருமிதம் !

உலக சிங்கங்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் பகிர்ந்த அற்புதமான புகைப்படங்கள்.;

Update: 2021-08-10 13:28 GMT

இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் விலங்குகளில் ஒன்றாக சிங்கங்கள் திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலக சிங்கங்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், உலக சிங்க தினமான இன்று வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ஆசிய சிங்கத்தின் தாயகமாக இந்தியா இருப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். சிங்கங்கள் தொடர்பான பல்வேறு புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது தற்போது அனைத்து தரப்பு மக்களாலும் பெரிதும் கவர படுகிறது. 


உலக சிங்க தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து தகவலை பகிர்ந்துள்ளார். மேலும் சிங்கங்கள் தொடர்பான பல்வேறு புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், சிங்கம் கம்பீரமாகவும், தைரியமாகவும் இருக்கும். ஆசிய சிங்கத்தின் தாயகமாக இருப்பதில் இந்தியா பெருமை கொள்கிறது. உலக சிங்க தினமான இன்று, சிங்கங்களைப் பாதுகாப்பதில் ஆர்வம் உள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 



கடந்த சில வருடங்களாக இந்தியாவின் சிங்கங்களின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருவது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் சிறப்பான ஒரு செய்தி. குஜராத் முதல்வராக நான் பணியாற்றியபோது, அங்குள்ள கிர் வனப்பகுதியில் சிங்கங்களை பாதுகாக்கவும், அதன் வாழ்விடங்களை பாதுக்காக்கவும் வேலை செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்தது. சிங்கங்களின் வாழ்விடங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக உள்ளூர் சமூகத்தின் ஒத்துழைப்புடன் உலகளாவிய சிறந்த நடைமுறைகளை கொண்ட பல்வேறு விதமான முயற்சிகள் எடுக்கப்பட்டன. இது அந்த பகுதியில் சுற்றுலாவுக்கும் ஊக்கமாக அமைந்தது என்றும் பிரதமர் மோடி அவர் குறிப்பிட்டுள்ளார்.  

Input: https://www.news18.com/amp/photogallery/lifestyle/world-lion-day-2021-amazing-images-of-lions-shared-by-pm-modi-vice-president-naidu-and-education-minister-pradhan-4067801-1.html?pv_candidate=0

Image courtesy: news18 





Tags:    

Similar News