சுயஉதவிக் குழுக்களில் 10 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்: பிரதமரின் இலக்கு 2024- ல் நிறைவேறும்!
சுயஉதவிக் குழுக்களில் 10 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் இலக்கு 2024 ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப் பட்டுவிடும்.
சுய உதவிக் குழுக்களில் 10 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் இலக்கு 2024 ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்பட்டுவிடும் என்று மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் இன்று தெரிவித்தார். சுயஉதவிக் குழுக்களில் புதிய பெண் உறுப்பினர்களை சேர்க்க தமது அமைச்சகம் மும்முரமாக செயல்பட்டு வருவதால், 10 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் இலக்கு 2024 ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப் பட்டுவிடும் என்று மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத் ராஜ் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார்.
தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ், சுயஉதவிக் குழுக்கள் உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு பெங்களூரைச் சேர்ந்த ஃபாஷ்னியர் தனியார் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இன்று மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம், மோடி பொறுப்பேற்ற போது, சுயஉதவிக் குழுக்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 2.35 கோடியாக இருந்ததாக அவர் தெரிவித்தார். ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் கிராமப்புற ஏழை பெண்களுக்கு அதிகாரமளிக்க கவனம் செலுத்தப்பட்டதன் விளைவாக, சுயஉதவிக் குழுக்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 9 கோடியைக் கடந்துள்ளதாகவும், இது 2024 ஆம் ஆண்டிற்குள் 10 கோடி உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையை எட்டும் என்றும் அவர் கூறினார்.
Input & Image courtesy: News