சமூக வலைதளங்களில் மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் எமோஜிக்கள் !

சமூக வலைதளங்களில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் எமோஜிக்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2021-12-07 14:23 GMT

இன்றைய காலகட்டங்களில் ஒவ்வொரு மனிதரும் தங்களுடைய வாழ்க்கையில் பெரும்பாலான நேரத்தை சமூக வலைதளங்களில் தான் செலவிடுகிறார்கள் குறிப்பாக அவர்கள் பயன்படுத்தும் பொதுவான ஆப்புகள் மூலமாக பலதரப்பட்ட எமோஜிகளையும் அவர்கள் பயன்படுத்துகிறார்கள். எனவே மக்கள் அதிகமாக பயன்படுத்தும் எமோஜி பட்டியலை unicode Consortium என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. எமோஜிக்கள் போன்ற உலகின் டிஜிட்டல் மொழிகளைக் கண்காணிக்கும் இந்த லாப நோக்கற்ற நிறுவனம், உலகின் சுமார் 92% ஆன்லைன் யூஸர்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் போது இந்த மினியேச்சர் டிஜிட்டல் எமோஜிக்களை பெரும்பாலான மக்கள் பயன்படுத்துகின்றனர் என்று கூறுகிறது.


2021-ஆம் ஆண்டு முழுவதும் எந்தெந்த எமோஜிக்ககள் அதிகம் பயன்படுத்தப்பட்டன என்ற இந்த நிறுவனத்தின் விவரங்களில் படி, டியர்ஸ் ஆஃப் ஜாய் எமோஜி மற்ற அனைத்து எமோஜிக்களை விட அதிகமாக பயன்படுத்தப்படுவதாக மற்றும் மிக பிரபலமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து ரீட் ஹார்ட் எமோஜி இரண்டாம் இடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இருக்கின்ற சூழ்நிலைகளை பொருத்தம் மக்கள் தங்களுடைய இருக்கின்ற சூழ்நிலைகளைப் பொறுத்து மக்கள் தங்களுடைய மழலைக்கு ஏற்றவாறு இந்த மொழிகளில் ஷேர் செய்தும் வருகிறார்கள்.


மூன்றாம் இடத்தில் ரோலிங் ஆன் ஃப்ளோர் லாஃபிங், நான்காம் இடத்தில தம்ஸ் அப் இதை தொடர்ந்து ஐந்தாவது இடத்தை லவுட்லி க்ரையிங் ஃபேஸ் உள்ளிட்ட எமோஜிக்கள் பிடித்து உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மக்கள் பல்வேறு விதமான எமோஜிக்களை பயன்படுத்தி வருகிறார்கள்.  

Input & Image courtesy:India Today




Tags:    

Similar News