ஹாரி பாட்டர் பதிவின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் மும்பை போலீஸ்!

Mumbai police spread the awareness of Wear mask through Harry Potter post.

Update: 2021-08-01 12:48 GMT

இந்தியாவில் தற்பொழுது மூன்றாவது அலை கொரோனா ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதனை தடுப்பதற்கு மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றனர். தடுப்பு ஊசி செலுத்தி கொண்டாலும் மக்கள் அனைவரும் முகக் கவசம் கட்டாயம் பொது இடங்களில் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. குறிப்பாக முகக் கவசங்கள் வெளியில் செல்லும் பொழுது அனைவரும் தகுந்த முறையில் அணிந்து செல்ல வேண்டும். இதற்காக அந்தந்த மாநிலங்களில் உள்ள காவல்துறையினர் முக கவசம் அணியாத மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறார்கள். 


அந்த வகையில் தற்பொழுது, இந்த தொற்றுநோய்களின் போது முகக் கவசம் அணியவும், பாதுகாப்பாக இருக்கவும், மக்களுக்கு நினைவூட்டுவதற்காக மும்பை காவல்துறை தங்கள் சமூக ஊடக பக்கங்களில், ஹாரி பாட்டர் குறிப்புடன் ஒரு ஆக்கப்பூர்வமான பதிவை பகிர்ந்துள்ளது. சமூகத்தில் அக்கறையுள்ள பல்வேறு தலைப்புகளைப் பற்றிய விழிப்புணர்வை பரப்ப இது பல புதுமையான வழிகளைக் கொண்டு வந்துள்ளது.  



என இந்த பதிவில் பிரபலமான ஹாரிபாட்டர் படத்தில் சில காட்சிகள் இடம்பெற்று, அதில் சில வசனங்களும் இடம் பெற்று உள்ளது. குறிப்பாக அந்த வசனத்தில், மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். நீங்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிய வில்லை என்றால் நோய் தொற்று உங்கள் வீட்டிற்கும் வந்து விடும் என்று அறிவுறுத்தினார்கள். தற்பொழுது இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி, மக்கள் மத்தியில் மும்பை போலீஸாரின் இந்த முயற்சிக்கு பாராட்டைப் பெற்றுள்ளது. 

Input: https://www.indiatvnews.com/trending/news-mumbai-police-reminds-people-to-wear-masks-through-this-harry-potter-post-723425

Image courtesy: Indiatv news 


Tags:    

Similar News