ஹெல்மெட் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த ஆக்கப்பூர்வமான வீடியோவை பகிர்ந்த மும்பை போலீஸ் !
மல்யுத்த வீரர் 'தி கிரேட் காளி' இடம்பெறும் வீடியோக்கள் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் மும்பை போலீஸ்.
மக்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்காக சமூக ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. தேவையான விஷயங்கள் இருக்கு நல்ல முறையில் பயன்படுத்துவது மக்கள் மத்தியில் எப்போதும் ஒரு பாராட்டப்பட வேண்டிய விஷயமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது, போக்குவரத்து விதிகளை பின்பற்ற மக்களை ஊக்குவிக்க மும்பை போலீஸ் புதுமையான மற்றும் ஆக்கபூர்வமான சமூக ஊடக பிரச்சாரங்களை அடிக்கடி கொண்டு வருகிறது. அவர்களின் சமீபத்திய முயற்சியில், இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் போது ஹெல்மெட் அணிய மக்களை ஊக்குவிக்கும் வகையில் தற்பொழுது ஒரு வீடியோவை பகிர்ந்து கொண்டார்கள்.
அதில் தொழில்முறை மல்யுத்த வீரர் "தி கிரேட் காளி" இடம்பெறும் வீடியோவை அவர்கள் பகிர்ந்துள்ளனர். ஹெல்மெட் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக 'தி கிரேட் காளி' இடம்பெறும் வீடியோவை மும்பை போலீஸ் பகிர்ந்து, இணையத்தில் வெற்றி பெற்றது. இருசக்கர வாகனம் பயணத்தின்போது, எப்போதும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஹெல்மெட் அணிவது மட்டும் போதாது. ஹெல்மெட் சரியான அளவு மற்றும் தலையில் சரியாகப் பொருந்துகிறதா? என்பதை உறுதிப்படுத்துவதும் அவசியம்.
இதுபோன்ற வசனங்கள் அடங்கிய வீடியோவை ஆன்லைனில் பகிரப்பட்டதிலிருந்து, இதுவரை 34,000 க்கும் மேற்பட்ட பார்வைகள் வீடியோக்கள் பார்த்துள்ளார்கள். பலர் சமூக ஊடக குழுவை பாராட்டியுள்ளனர். இந்த வீடியோ மும்பை காவல்துறையின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், மல்யுத்த வீரர் தலையில் பொருந்தாத சிறிய ஹெல்மெட் அணிய போராடுவதாக தெரிகிறது. எப்போதும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஹெல்மெட் அணிவது மட்டும் போதாது. ஹெல்மெட் சரியான அளவு மற்றும் தலையில் சரியாகப் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்துவதும் அவசியம் இந்தக் கருத்தை அந்த வீடியோ தெளிவுபடுத்துகின்றது.
Image courtesy: Indian Express news