மாற்றுத்திறனாளிக்கு உதவிய காவல் அதிகாரியின் வைரல் வீடியோ !

மும்பை காவல் அதிகாரி மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.

Update: 2021-12-16 14:06 GMT

எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறருக்கு செய்கின்ற உதவி பெரிய அளவில் அவர்களுக்கு உதவியாக இருந்திருக்கும். உதவும் மனப்பான்மை உள்ளவர்கள் இந்த உலகில் இருப்பதால் தான் பல நன்மைகள் நடக்கிறது. மும்பையை சேர்ந்த போக்குவரத்து தலைமை காவலர் அதிகாரியான ராஜேந்திர சோனாவானே என்பவர் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடங்களில் எப்போதும் போல பணிசெய்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் மும்பையில் உள்ள சத்திரபதி சிவாஜி மஹாராஜ் டெர்மினஸ் சாலையில் இவர் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.


அப்போது திடீரென்று மாற்று திறனாளி ஒருவர் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள அந்த சாலையை கடக்க முயற்சித்துள்ளார். இதை பார்த்த தலைமை காவலரான ராஜேந்திர சோனாவானே உடனே அந்த மாற்று திறனாளிக்கு ஓடிச்சென்று உதவியுள்ளார். அந்த நபரின் கையை பிடித்து மெதுவாக சாலையை கடக்க அவர் உதவி செய்துள்ளார். இந்த நெகிழ்ச்சி சம்பவத்தை அந்த சிக்னலில் நின்று கொண்டிருந்தவர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர். பிறகு இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாக தொடங்கியது.



இந்த வீடியோவை டுவிட்டரில் மும்பை போலீஸின் அதிகாரப்பூர்வ பக்கத்திலும் பதிவிட்டுள்ளனர். "எங்களது மும்பை போலீஸ் அதிகாரி, உலகில் உள்ளவர்களின் மனதை வென்றுள்ளார் என்றும், தலைமை காவலர் அதிகாரியான ராஜேந்திர சோனாவானே சாலையை கடப்பதற்கு மாற்று திறனாளி ஒருவருக்கு உதவி உள்ளார். இது மிக சிறந்த உதவி" என்று பதிவிட்டுள்ளார்.  

Input & Image courtesy:Indiatimes




Tags:    

Similar News