பிரதமருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த பேட்மிட்டன் வீராங்கனை !

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனையான பிவி. சிந்து அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பிரதமருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Update: 2021-08-19 13:46 GMT

2020 ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 126 வீரர்-வீராங்கனைகள் 18 விளையாட்டுகளில் பங்கேற்றனர். மேலும் வரலாற்றில் முதல் முறையாக அதிகபட்சமாக 7 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்தது. ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் பதக்கம் வென்று இந்தியாவை பெருமை படுத்தியுள்ளார். ஒலிம்பிக்கில் தடகளத்தில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சிறப்புமிக்க சாதனையை அவர் படைத்தார்.


பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, மல்யுத்த வீரர் ரவிகுமார் தகியா ஆகியோர் வெள்ளிப்பதக்கமும், பேட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து, குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா, மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் வெண்கல பதக்கமும் பெற்றனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் சாதித்து நாடு திரும்பிய இந்திய வீரர்-வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனைகளை பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்திற்கு அழைத்து சந்தித்தார்.




இந்த நிலையில், பிரதமர் மோடியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பிவி. சிந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறுகையில், "நமது மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி-ஜியுடன் இறுதியாக ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி" என்று அவர் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு 50,300 லைக்குகளை பெற்றுள்ளது. ஒலிம்பிக்கில் நாட்டை பெருமைப்படுத்திய சிந்துவை பலர் வாழ்த்திய அதே சமயத்தில், மற்றவர்கள் வரவிருக்கும் சர்வதேச நிகழ்வுகளில் தனது வெற்றிப் பாதையைத் தொடர வேண்டும் என்ற ஊக்கத்தையும் அளித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.   

Input: https://m.timesofindia.com/life-style/food-news/pv-sindhu-finally-eats-ice-cream-with-pm-modi/amp_articleshow/85398930.cms

Image courtesy:times of India 


Tags:    

Similar News