சர்வதேச விண்வெளி மையம்: மஞ்சள் நிற உடையில் ரஷ்ய வீரர்கள் இருப்பதற்கு என்ன காரணம்?
சர்வதேச விண்வெளி மையத்தில் ரஷ்ய வீரர்கள் மஞ்சள் நிற உடையில் இருந்ததற்கான பின்னணி காரணம்.;
சமீபத்தில் விண்வெளியில் இருந்து ரஷ்ய வீரர்கள் 2 பேருடன் வான்டே ஹெய் என்ற அமெரிக்கரும் பூமிக்குத் திரும்பினார். சர்வதேச விண்வெளி மையத்துக்கு கடந்த மாதம் சென்ற ரஷ்ய வீரர்கள் 3 பேர் நீல நிறம் கலந்த மஞ்சள் நிற உடையை அணிந்திருந்தது பேசு பொருளாக மாறியது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போர் புரிந்து வரும் நிலையில் இந்த 3 ரஷ்ய வீரர்களும் விண்வெளி மையத்துக்குச் சென்றனர். அப்போது அவர்கள் மஞ்சள் நிறத்தில் ஆங்காங்கே நீலம் கலந்து உடை அணிந்திருந்தனர். உக்ரைன் தேசிய கொடியின் வண்ணங்களும் இதேதான் மஞ்சள் நீலம்.
இதை பிரதிபலிக்கும் வகையில் இருந்ததால் தான் இந்த விஷயம் பேசு பொருளானது. அவரிடம் நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர் இதுதொடர்பாக கேள்வி எழுப்பினார். அப்போது அவர் தனது அனுபவத்தை பற்றியும் இந்த உடை தொடர்பாகவும் சில கருத்துகளை பகிர்ந்தார். அவர் கூறுகையில், ரஷ்யாவில் உள்ள பவுமேன் மாஸ்கோ ஸ்டேட் டெக்னிக்கல் பல்கலைக்கழகத்தின் வண்ணங்கள் தான் மஞ்சளும் நீலமும். அதை சுட்டிக்காட்டும் வகையில் தான் அவர்கள் அந்த வண்ணங்களில் உடை அணிந்திருந்தனர். அவர்கள் எந்தவொரு அரசியல் நிலைப்பாட்டையும் அதன்மூலம் வெளிப்படுத்தவில்லை. ரஷ்ய வீரர்களுடன் நாங்கள் மிகுந்து ஒத்துழைப்பை வழங்கி வந்தோம். ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து நாங்கள் எதுவும் அதிகம் பேசிக் கொண்டதில்லை.
ஆனால், நான் ரஷ்ய வீரர்களின் அவர்களின் கருத்தை கேட்டிருக்கிறேன். நான் அவர்களுடன் எப்போதும் ஒத்துழைப்பு வழங்கி பணியாற்றுவதை விரும்புகிறேன். எனக்கு அதில் எந்தப் பிரச்னையும் இல்லை. அவர்கள் தொழில்நுட்ப ரீதியாக சிறந்த கெட்டிக்காரர்கள். நான் பூமிக்கு திரும்பிய பிறகு புவியீர்ப்பு விசைக்கு பழகி வருகிறேன். மேலும் இவர் இவர் விண்வெளியில் அதிக நாட்கள் குறிப்பாக 355 நாட்கள் இருந்த காரணத்திற்காக இவர் அதிக நாட்கள் விண்வெளியில் தங்கி இருந்த வீரர் என்ற பெருமையையும் பெறுகிறார்.
Input & Image courtesy: Indian Express