வேற்று கிரகவாசிகளை சமாளிக்க பாதிரியார்கள் நியமிக்கும் நாசாவின் திட்டம்!
வேற்று கிரகவாசிகளை சமாளிப்பதற்காக நாசா தற்பொழுது பாதிரியார்களை பணி அமர்த்துவதாக கூறியுள்ளது.;
உலகில் பல மர்மமான விஷயங்கள் இன்றுவரை தீர்க்கப்படாத புதிராகவே இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த பிரபஞ்சத்தில் வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா? இல்லையா? என்பது தற்பொழுது வரை மர்மமாக இருந்து வருகிறது. ஒருவேளை அவர்கள் இருந்தால் அவர்களை சமாளிப்பதற்கு மனிதர்கள் இவ்வாறான செயல்களை செய்ய வேண்டும் என்பது பற்றி நாசா தற்போது சிந்தித்து உள்ளது. மேலும் இதன்மூலம் மனிதர்களுக்கு கடவுள் மற்றும் உயிரினங்களின் தோற்றம் பற்றிய கண்ணோட்டம் வேறுபடலாம் என்பதாலும் இப்படியொரு ஏற்பாட்டை செய்ய உள்ளது.
இந்நிலையில் நியூஜெர்சியில் இருக்கும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள Center for Theological Inquiry தற்பொழுது 24 பாதிரியார்களை நியமித்துள்ளது. இதற்காக 2014 ஆம் ஆண்டே சுமார் $1.1 மில்லியன் அமெரிக்க டாலர்களை நாசா தரப்பில் வழங்கியுள்ளது. குறிப்பாக இந்த மையத்தில் பல்வேறு நபர்கள் அடங்கிய உள்ளார்கள். அவர்கள் பாதிரியார்கள் மற்றும் அறிவியலாளர்கள், விஞ்ஞானிகள், சட்ட வல்லுனர்கள் போன்று பலர் இதில் அடங்கியுள்ளது.
மேலும் நாசா அமைந்துள்ள இந்த மையத்தில் பல்வேறு கேள்விகளுக்கான விடைகள் தற்பொழுது கிடைக்க உள்ளன குறிப்பாக வேற்றுக்கிரகவாசிகள் எந்த கிரகத்தில் வசிக்கிறார்கள். மேலும் அவர்கள் இருப்பது உண்மையா? இல்லையா? என்பது போன்ற தகவல்கள் முடிவுக்கு வரும் என்பது போல் தெரிகிறது.
Input & Image courtesy: News 18