விண்வெளி வீரர்களுக்கான பிரத்யேக உணவு போட்டி: பரிசு தொகை 7.4 கோடி ரூபாய்!

விண்வெளி வீரர்களுக்கான நீண்டநாள் பயன்படுத்தும் சத்தான உணவு தயாரிப்புக்கான போட்டி, நாசா அறிவிப்பு.

Update: 2022-01-26 14:11 GMT

விண்வெளிப் பயணம் செய்து என்பது மக்கள் நினைக்கின்ற அளவிற்கு அவ்வளவு சாதாரணம் பயணமாக இருக்காது. நிறைய சாகசங்கள் மற்றும் நிறைய விட்டுக்கொடுக்கும் விஷயங்களை செய்ய வேண்டும். குறிப்பாக சாப்பாடு, தூக்கம் போன்ற பலவற்றை விட்டுக் கொடுக்க வேண்டும். அப்படி விண்வெளிப் பயணத்தின் போது வீரர்களுக்கு சத்தான உணவுகளை வழங்க நாசா முடிவு செய்துள்ளது. பெரும்பாலும் அவர்கள் விண்வெளியில் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தான் சாப்பிடுகிறார்கள். இதனால் அவர்களின் முழு ஆரோக்கியத்திற்கு நன்மை பயப்பது அல்ல. இதன் காரணமாக நாசா பதப்படுத்தப்படாத மற்றும் முற்றிலும் ஆரோக்கியமான வகையில் உணவுகளை கண்டுபிடிக்கும் முயற்சியும் களமிறங்கி போட்டிகளை நடத்தி வருகிறது.  


நாசா ஏற்கனவே இது போன்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது விண்வெளி வீரர்களுக்காக நீண்டநாள் பயன்படுத்தும் சத்தான உணவுகளை தயாரிப்புகளுக்கான போட்டியினை 'Deep Space Food Challenge' என்ற பெயரில் போட்டியை தொடங்கி உள்ளது மேலும் அக்டோபர் மாதம் நடைபெற்ற போட்டியில் ஏற்கனவே 18 பெரும் வெற்றி பெற்று 4 லட்சத்து 50 ஆயிரம் டாலர்களை பெற்றுள்ளார்கள். அந்த வகையில் தற்போது இந்த போட்டி 2-வது முறையாக நடைபெறுகிறது. மேலும் தற்பொழுது பரிசுத் தொகையும் அதிகரித்து உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு மில்லியன் டாலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டு உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூபாய். 7,48,66,840 ஆகும். 


இந்த போட்டியில் நீண்டநாள் கெடாத உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை புதுமையான முறையில் கண்டுபிடிக்கும் நபர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படுவதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நாசா தெரிவித்துள்ளது. இந்த பரிசு போட்டி தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. எனவே மேற்சொன்ன சவால்களை சமாளித்து, இந்த போட்டியில் வெற்றி பெறும் அதிர்ஷ்டசாலிகள் யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.   

Input & Image courtesy: News 18


Tags:    

Similar News