வியாழன் கிரகத்தில் ஏற்பட்ட புயல்: நாசா வெளியிட்ட வீடியோ!

வியாழன் கிரகத்தில் ஏற்பட்ட பெப்பரோனி புயலின் வீடியோவை பகிர்ந்த நாசா.

Update: 2022-02-15 14:13 GMT

பூமியை தவிர மற்ற கிரகங்களில் என்ன நடக்கிறது? என்பதை எப்பொழுதும் மனிதர்களுக்கு தெரிவிப்பதில் முன்னோடியாக நாசா விளங்கி வருகிறது. ஒவ்வொரு கிரகங்களிலும் ஒவ்வொருநாளும் வெவ்வேறு விதமான நடவடிக்கைகள் நடந்துதான் வருகின்றன அந்த வகையில் தற்பொழுது வியாழன் கிரகத்தில் ஏற்பட்ட பெப்பரோனி பெயர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள புயலின் வீடியோவை நாபா தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் தற்பொழுது வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை தற்போதுவரை 1 மில்லியன் மக்களை சென்றடைந்துள்ளது.   


சில நாட்களுக்கு முன் தேசிய பீட்சா தினத்தை கொண்டாடும் வகையில் நாசா ஒரு வீடியோவைப் பகிர்ந்தது. உடன் "இன்டர்பிளேனட்டரி பீட்ஸா தினம் எப்படி இருக்கிறது? எங்கள் ஜூனோ மிஷன் வழியாக ஜூபிடர் என்கிற பீட்சாவின் மேல் டாப்பிங் செய்யப்பட்டுள்ள பெப்பரோனி புயல்கள் கண்டறியப்பட்டன" என்கிற கேப்ஷனையும் நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. நாசாவின் பெரும்பாலான இன்ஸ்டாகிராம் பதிவுகள் வெறும் தகவல்கள் மற்றும் போட்டோக்கள், வீடியோக்களாக மட்டுமின்றி அது கல்வி, கற்றலையும் சார்ந்தவைகளாகும்.


பொதுவாக ஒவ்வொரு கிரகங்களும் கடக்கும் புயல்கள் என்பது சாதாரணமான விஷயம் கிடையாது. அவற்றை கண்காணிப்பது மிகவும் கடினம் அப்படிப்பட்ட புயலை வியாழன் கிரகத்தில் நாசா படம் பிடித்துள்ளது ஒரு அற்புதமான அனுபவமாக கருதுகிறது. இந்த புயல் பற்றிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் பல்வேறு மக்கள் தங்களுடைய கருத்துகளைத் இது பற்றி தெரிவித்து வருகிறார்கள்.

Input & image courtesy:News 18

Tags:    

Similar News