5 கோள்களை இந்தியாவில் பார்க்க முடியும்.. நாசா அறிவிப்பு.. இன்று நடக்கப் போகும் அதிசயம்?
இந்தியாவில் வெறும் கண்களால் ஐந்து கோள்களையும் நம்மால் பார்க்க முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
மிகவும் அரிய நிகழ்வு என்றால் அதை பூமியிலிருந்து இரண்டு மூன்று கிரகங்களை காண்பது தான். அந்த வகையில் இன்று செவ்வாய்க்கிழமை பூமியிலிருந்து ஐந்து கோள்களையும் பார்க்க முடியும். அதுவும் வெறும் கண்ணால் பார்க்க முடியும் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? உண்மையில், உங்களால் பார்க்க முடியும். குறிப்பாக செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய ஐந்து கோள்களையும் நிலவுக்கு அருகே ஒரே வரிசையில் தோன்றி போகிறது. எனவே இது வானில் நடக்கும் அதிசயம் என்று நாசா விஞ்ஞானிகள் வர்ணிக்கிறார்கள்.
குறிப்பாக இன்று இந்த கிரகங்களை உங்களால் காண முடியும். சூரியன் அஸ்தமனத்திற்கு பிறகு அரை மணி நேரத்தில் வானை உற்று கவனித்தால் ஐந்து கிரகங்களையும் உங்களால் பார்க்க முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். சரியாக உற்று கவனித்தால் 5 கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் தெளிவாக தெரியும். சூரியன் மறைந்த அரை மணி நேரத்தில் இந்த ஒரு நிகழ்வு வானில் நிகழ இருக்கிறது. மேலும் புதனும், வியாழனும் தொடுவானத்துக்கு கீழே சீக்கிரமாக மறைந்துவிடும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறது.
வானம் தெளிவாக இருக்கும் நிலையில் மேற்கு புறத்தை நன்றாக கவனிக்க உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இந்த ஒரு ஐந்து கிரகத்தை நீங்கள் சரியாக பார்க்க முடியும், வெறும் கண்ணால் உங்களால் பார்க்க முடியும். ஆனால் புதன் மற்றும் யுரேனஸ் கோள்கள் மட்டும் அவ்வளவு ஒளிரும் தன்மை இல்லாத காரணத்தினால் அவற்றை சரியாக பார்ப்பதற்கு பைனாக்குலரை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். காணவே முடியாத யுரேனஸ் கிரகத்தையும் காண்பதற்கான ஒரு அறிய வாய்ப்பாக இது இருக்கும் என்றும் நாசா விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்.
Input & Image courtesy: Puthiyathalaimurai