தேசிய கோபால் ரத்னா விருதுகள் - பால்வள தினத்தையொட்டி கொடுக்க ஏற்பாடுகள்!

தேசிய பால்வளத் தினத்தை ஒட்டி தேசிய கோபால் ரத்னா விருதுகள் கொடுக்க ஏற்பாடு.

Update: 2022-08-25 10:52 GMT

கால்நடை  பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம் தேசிய கோபால் ரத்னா விருதுகள் 2022-க்கான விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக வரவேற்கிறது. கடந்த 01.08.2022 முதல் https://awards.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 15.09.2022 ஆகும். இவ்விருதுகள் தேசிய பால்வள தினத்தையொட்டி, 26 நவம்பர் 2022 வழங்கப்பட உள்ளது.


விவசாயிகளின் நீடித்த வாழ்வாதாரத்திற்காக கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. பசு மற்றும் எருமை இனங்களை சிறப்பான முறையில் வளர்த்த பால்பண்ணை விவசாயி, சிறந்த செயற்கை கரூவூட்டல் தொழில்நுட்பம், சிறந்த பால் கூட்டுறவு சங்கம், பால் உற்பத்தி நிறுவனம் உள்ளிட்ட பிரிவுகளில் இந்த தேசிய கோபால் ரத்னா விருதுகள் வழங்கப்படுகின்றன.


மேலும் வெளிப்படை தன்மையையும், பொதுமக்களின் பங்கேற்பையும் உறுதி செய்வதற்காக ஒரே தளத்தின் கீழ் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், முகமைகளின் அனைத்து விருதுகளையும் ஒருங்கிணைத்து கொண்டு வர பொதுவாக தேசிய விருது இணையப்பக்கம் https://awards.gov.in மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு விருதுகளுக்கு தனிநபர்களை அல்லது நிறுவனங்களை பரிந்துரை செய்யும் குடிமக்கள் அல்லது அமைப்புகளுக்கு இந்த இணையப்பக்கம் வசதி செய்கிறது.

Input & Image courtesy: PIB

Tags:    

Similar News