ரசிகையின் விருப்பத்தையும் நிறைவேற்றி தேசிய கொடியின் மகத்துவத்தை மதித்த நீரஜ் சோப்ரா

தேசிய கொடியில் ஆட்டோகிராப் கேட்ட ரசிகையிடம் அவரையும் ஏமாற்றாமல் தேசிய கொடியையும் மதித்து நடந்த நீரஜ் சோப்ராவின் செயல்.;

Update: 2023-08-29 10:00 GMT
ரசிகையின் விருப்பத்தையும் நிறைவேற்றி தேசிய கொடியின் மகத்துவத்தை மதித்த நீரஜ் சோப்ரா

ஹங்கேரியில் நடந்த உலக தடகள சாம்பியன்ஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சகாப்தம் படைத்த இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவிடம் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ரசிகை ஒருவர் இந்திய தேசியக் கொடியில் ஆட்டோகிராப் போட்டு தருமாறு அணுகினார். சோப்ரா அந்த ரசிகையை ஏமாற்ற மனமின்றி அவரது பனியனின் வலதுகையில் கையெழுத்திட்டார்.


இதனை படத்துடன் பத்திரிகையாளர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் . இந்த படம் சமூக வலைதளத்தில் வைரலானது. அத்துடன் தேசிய கொடியின் மகத்துவத்தை மதித்து நடந்து கொண்ட நீரஜ் சோப்ராவின் செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.


SOURCE :DAILY THANTHI

Similar News