UP காவல்துறையின் சூப்பர் ஐடியா - பேஸ்புக் மூலம் தடுக்கப்பட்ட மாணவர் நீட் தேர்வு தற்கொலை!
பேஸ்புக் மூலமாக உத்தரப் பிரதேசத்தில் நீட் தேர்வு முடிவு வெளியாக்கி மனசோர்வு அடைந்த மாணவரின் தற்கொலை தடுக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் மூலமாக தற்போது தற்கொலை தடுப்பு மற்றும் தற்கொலை தொடர்பான பதிவுகள் பேஸ்புக்கில் ஏதாவது வந்து இருந்தால் அது தொடர்பாக உடனடியாக அலெர்ட் கொடுக்குமாறு உத்தரபிரதேசத்தை சேர்ந்த காவல்துறை அந்நிறுவனத்திடம் உத்தரவை மேற்கொண்டு இருந்தது. மேலும் பேஸ்புக்கில் சமூக வலைத்தளங்களின் உதவியின் மூலமாக உத்திரபிரதேச மாநிலத்தில் தற்கொலை ஒன்று தற்போது தடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வெளிவந்தன.
பல மாநில மாணவிகள் மாணவர்கள் இத்தேர்வில் தேர்ச்சி அடைந்து இருந்தாலும் ஆங்காங்கே சிலர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் தான் தோல்வி அடைந்து விட்டேன் இன்று மனசோடு சில மாணவ, மாணவிகள் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 29 வயதான இளைஞர் நீட் தேர்வில் தோல்வி அடைந்தது காரணமாக விரக்தியில் சில நாட்கள் இருந்திருக்கிறார். தோல்வி மன வருத்தத்தை அவர் தனது facebook பக்கத்தில் பதிவிட்டு கொண்டார்.
நல்ல வேளையில் பேஸ்புக்கில் செய்யப்பட்டுள்ள ரியல் டைம் தொழில்நுட்பம் மூலமாக இந்த தற்கொலை பற்றிய பதிவு போலீசாருக்கு அலார்ட்டாக வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவரின் வீட்டிற்கு விரைந்த போலீசார் அவர் விஷம் அருந்தி உயிரே மாய்க்கும் தருவாயில், அவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறார்கள். மேலும் இது போன்ற மனநிலை மீண்டும் ஏற்பட்டால் காவல்துறைக்கு தொடர்பு கொண்டு மனநல ஆலோசனை பெறலாம் என்றும் அறிவுரை கூறப்பட்டுள்ளது.
Input & Image courtesy: News 18