கொரோனா இந்தியாவை புதிய அலையை உருவாக்குமா? எய்ம்ஸ் மருத்துவர்கள் விளக்கம்!

கொரோனா இந்தியாவில் புதிய அளவில் உருவாக்குமா இது குறித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் விளக்கி இருக்கிறார்கள்.

Update: 2022-12-30 01:56 GMT

சீனாவில் தற்பொழுது வேகமாக பரவி வரும் உருமாறிய பி.எப்7 மற்றும் மூன்று வகை வைரஸ்கள் உலக நாடுகளில் தற்பொழுது அச்சுறுத்தும் வகையில் மாறிவிட்டது. மரபணு மாற்றங்களான நான்கு வைரஸ்கள் ஒன்றிணைந்து சீனாவில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் அதிகரித்து வரும் கொரோனா பரவலின் காரணமாக அங்கு பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகரித்து தான் வந்திருக்கிறது.


மேலும் சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் இதனுடைய தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. சீனாவில் மீண்டும் பயன்படுத்தி புதிய கொரோனா பரவல் 10 நாட்களில் உச்சத்தை தொட்டு, பிறகு குறைக்க தொடங்கி இருக்கிறது. மூன்று ஆண்டுகளில் சர்வதேச அளவில் உச்சம் பெற்றுள்ள ஆய்வு செய்த சர்வதேச நிபுணர்கள் புதிய கொரோனாவை மிகப்பெரும் வாய்ப்புகள் வர வாய்ப்பு இல்லை என்று கூறியிருக்கிறார்கள். இந்த வைரஸ் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். பி.எஃப் 7 வைரஸ் தாக்கம் எப்படி இருக்கும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் தற்பொழுது ஆய்வு செய்து தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.


அதன்படி அடுத்த மாதம் இந்தியாவில் கொரோனா சற்று அதிகமாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும், அதே சமயத்தில் இந்த அதிகரிப்பு புதிய கொரோனா அலையாக மாறுவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இதற்கு முன்பு கொரோனா தாக்கம் வெளிநாடுகளில் அதிகரித்த பொழுதிலும் புதிய அலை உருவெடுக்காது என்று கூறுகிறார்கள்.

Input & Image courtesy: Maalaimalar

Tags:    

Similar News