வாட்ஸ்அப் சேனலில் இணைந்த பிரதமர்.. இனி அனைத்து மக்களுடன் நேரடி தொடர்பு..

Update: 2023-09-20 23:57 GMT

பாரதப் பிரதம நரேந்திர மோடி அவர்கள் மக்களுடன் எப்பொழுதும் நேரடியாக தொடர்பில் இருக்க வேண்டும் என்று விரும்புபவர். ஏற்கனவே சமூகவலைத்தளங்களில் அனைத்திலும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தன்னுடைய ஒவ்வொரு அதிகாரப்பூர்வமான செயல்கள் அனைத்தையும் Facebook, Instagram, எக்ஸ் போன்ற பல்வேறு சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது நரேந்திர மோடி அவர்கள் வாட்ஸ் அப்பில் சேனலில் இணைந்து இருக்கிறார்.


மக்களிடம் நேரடியாக தொடர்பு இருக்க வேண்டும் என்பதற்காக தற்பொழுது whatsapp சேனலில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இணைந்து இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளி வந்து இருக்கிறது. இதன் காரணமாக ஏழை எளிய இந்திய மக்கள் அனைவரும் பிரதமர் நரேந்திர மோடியை பற்றிய உடனுக்குடனான செய்திகளையும் தகவல்களையும் இந்த ஒரு சேனல் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்றும், இதனால் பிரதமர் பணிகளை நாட்டு மக்களுக்காக செய்கிறார் என்பதை மக்கள் உணர முடியும் என்று மத்திய அரசு சார்பில் கூறப்பட்டிருக்கிறது.


பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று வாட்ஸ்அப் சேனலில் இணைந்தார். இந்த இணைவதற்கான சேனலின் இணைப்பையும் அவர் பகிர்ந்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் பதிவில், பிரதமர் கூறியிருப்பதாவது, "எனது வாட்ஸ்அப் சேனலைத் தொடங்கியுள்ளேன். இந்த ஊடகத்தின் மூலம் இணைந்திருக்க ஆவலாக உள்ளேன். பொதுமக்கள் இந்த சேனலில் இணைவதற்கு கீழ் கண்ட லிங்கை https://www.whatsapp.com/channel/0029Va8IaebCMY0C8oOkQT1F கிளிக் செய்து பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சேனலில் இணைந்து கொள்ளலாம்."

Input & Image courtesy: News

Tags:    

Similar News