ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கான ஆர்வ பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் குறிப்பாக பரிந்துரை அறிக்கை அளிப்பதற்கான எந்த ஒரு காலக்கெடுவும் இல்லை என்று சட்ட கமிஷன் தற்போது தகவல்களை தெரிவித்து இருக்கிறது சிக்கலான சட்ட பிரச்சனைகளை அரசுக்கு அறிவுரை வழங்குவதற்காக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சட்ட கமிஷன் அமைக்கப்பட்டு வருகிறது.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக இந்த சட்ட கமிஷன் ஏற்கனவே ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது இந்த விவகாரம் பல ஆண்டுகளாக சட்ட கமிஷன் பரிசீலனையில் தான் இருந்து வந்தது. இந்த நிலையில் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது ஜனநாயகம் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு அல்லது நாட்டின் கட்டாட்சி எந்த வகையிலும் உடன்படுமா என்று உள்ளிட்ட பல்வேறு தொடர்பான அம்சங்களும் இந்த கமிஷனில் கருத்துக்களாக கேட்கப்பட்டிருந்தது.
இதேபோல எந்த அரசியல் கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாத நிலையில் தொங்கு நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம் என்ற சொல் வந்தால் அதை சமாளிப்பது தொடர்பான ஆலோசனைகளையும் தற்போது பெறப்பட்டு வருகிறது. அவற்றின் அடிப்படையில் மூன்று கருத்துக்களை முந்தைய சட்ட கமிஷன் வழங்கியிருந்த நிலையில் தற்போது பல்வேறு பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு எடுக்கும் ஒரு நிலையில் இருக்கிறது சட்ட கமிஷன்.
Input & Image courtesy: News