விவசாயிகளின் நலனுக்கு தேசிய மஞ்சள் வாரியம்... பிரதமரின் அட்டகாச அறிவிப்பு...
விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் தெலுங்கானாவில் 13500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். மகப்பூரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தெலுங்கானா மட்டும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மஞ்சள் பயிரிடும் விவசாயிகளின் நலனுக்காக மஞ்சள் வாரியம் அமைக்கப்படும் என்றும், இந்த தேசிய மஞ்சள் வாரியம் வாயிலாக மஞ்சள் விவசாயிகளுக்கு முழுமையான ஆதரவு மற்றும் அவர்களுடைய நலனுக்காக போராடும் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இது விநியோக சங்கலியின் மதிப்பு கூட்டல் மற்றும் விவசாயிகளுக்கு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு உதவும்.
மஞ்சள் வாரியம் அமைப்பிற்கான தெலுங்கானா மற்றும் ஒட்டுமொத்த நாட்டின் மஞ்சள் விவசாயிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார். ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்திற்கு மேன்மைமிகு நிறுவனம் என்ற அந்தஸ்து வழங்கப்பட இருக்கிறது. அத்துடன் சிறப்பு நிதியும் அளிக்கப்பட இருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.
தெலுங்கானாவின் பழங்குடியினர் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் அதற்கு பழங்குடியினரின் தெய்வமான சம்மக்கா சாருக்கவின் பெயர் சூட்டப்படும், 900 கோடி செலவில் நிதி ஒதுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குறிப்பிட்டிருந்தார். அது மட்டும் கிடையாது தெலுங்கானா மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பாஜக தற்போது உறுதி பூண்டு இருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தன்னுடைய உரையின் போது தெளிவாக மக்களுக்கு கூறினார்.
Input & Image courtesy: News