பாழடைந்த பள்ளிக்கூடம் கட்டிடம்: மரத்தின் அடியில் கல்வி கற்கும் நீலகிரி மாணவர்கள் அவல நிலை!

நீலகிரியில் பாழடைந்த பள்ளிக்கட்டிடம் காரணமாக மரத்தடியில் கல்வி கற்கும் மாணவர்கள்.

Update: 2022-05-02 01:54 GMT

நீலகிரியில் தற்போது செயல்பட்டு வரும் ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் புதிய கட்டிடம் இல்லாத காரணத்தினால் மாணவர்களின் நிலைமை தற்போது மரத்தடியில் கல்வி கற்கும் ஒரு சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பள்ளியில் உள்ள பள்ளிக் கட்டிடம் பாழடைந்து உள்ள நிலையில் தொடர்ச்சியாக வகுப்புக்கள் காரணமாக மாணவர்களுக்கு கல்வி எடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் மரத்தடியில் அடுத்த ஆண்டு கல்வி எடுக்கப்படுகிறது. நீலகிரியில் அரசு ஆரம்பப் பள்ளியில் கவுண்டனுாா், கொம்பேபள்ளி, வெள்ளிச்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறாா்கள்.


ஒசூா் அருகே அரசு பள்ளிக் கட்டடம் பாழடைந்துள்ளதால் மாணவா்கள் மரத்தடியில் கல்வி கற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். சிதிலமடைந்து காணப்படும் கட்டடத்திற்கு மாற்றாக புதிய கட்டடத்தை அரசு கட்டித் தர வேண்டும் என்று தொடர்ச்சியான வண்ணம் தற்போது பெற்றோரும் கோாிக்கை விடுத்துள்ளனா். மேலும் இந்தப் பள்ளிக்கூடம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த தேன்கனிக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்டது. 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு கல்வி கற்று வருகிறார்கள்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை கல்வி வட்டத்திற்குட்பட்டது நாகமங்கலம் ஊராட்சி. அங்குள்ள நீலகிரி கிராமத்தில் செயல்படும் அரசு ஆரம்பப் பள்ளியில், கவுண்டனுாா், கொம்பேபள்ளி, வெள்ளிச்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறாா்கள். 


மொத்தமாக 5 வகுப்புகள் உள்ள பள்ளியில் தற்போது இரண்டு வகுப்புகள் மட்டுமே இருந்தது அதுவும் தற்போது பராமரிப்பின்றி பாழடைந்து விட்ட காரணத்திற்காக, அனைத்து மாணவர்களும் மரத்தடியில் அமர்ந்து கல்வி கற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இது மாதிரி டெல்லியில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கழிப்பறை சுற்று சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் பள்ளிக்கட்டிடங்களில் உறுதித் தன்மை குறித்த ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டது ஆனால் இந்தப் பள்ளிக்கு செல்லவில்லை என்பது வருத்தத்திற்குரியது. 

Input & Image courtesy: News 18

Tags:    

Similar News