'சூப்பர்! இதுதான் மோடி ஸ்டைல்' - பாராட்டிய நார்வே நாடு, தெரியுமா?

ஒரே முறை பயன்படுத்தி கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்கு ஜூலை ஒன்றாம் தேதி முதல் இந்திய அரசு தடை விதிக்கப்பட்டதற்கு நார்வே, டென்மார்க் ஆகிய நாடுகள் இந்தியாவை பாராட்டியுள்ளன.

Update: 2022-07-02 06:30 GMT

ஒரே முறை பயன்படுத்தி கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்கு ஜூலை ஒன்றாம் தேதி முதல் இந்திய அரசு தடை விதிக்கப்பட்டதற்கு நார்வே, டென்மார்க் ஆகிய நாடுகள் இந்தியாவை பாராட்டியுள்ளன.

சுற்றுச்சூழலுக்கும், கடல் சார்ந்த பகுதிகளுக்கும் தீங்கு விளைவிக்கும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் போன்றவற்றை ஜூலை ஒன்றாம் தேதி முதல் தண்டனைக்குரிய குற்றமாகும் என மத்திய அரசு அறிவித்தது.

மேலும் இந்த தடையை நேற்று முதல் இந்திய அரசு அமல்படுத்திய நிலையில் இந்த அறிவிப்பை நார்வே அரசு பாராட்டியுள்ளது.

இது தொடர்பாக பேசிய நார்வே தூதர் மார்ட்டின் ஆம்டால் போத்தம் கூறுகையில், 'ஒருமுறை மற்றும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தடை செய்த இந்திய அரசு நடவடிக்கையின் நார்வே வரவேற்கிறது. இந்த முக்கியமான நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள், எங்கள் தூதரக வளாகத்தில் இந்த பிளாஸ்டிக் தடையை நடவடிக்கை மிக தீவிரமாக கடைபிடிப்போம். நார்வையில் கடந்த ஆண்டு பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தரை விதிக்கப்பட்டது, இந்தியாவில் உள்ள நகராட்சிகளுடன் பிளாஸ்டிக் பைகளை எப்படி கையாள்வது என பகிர்ந்து கொண்டோம்' என தெரிவித்துள்ளார். 



Source - Maalai Malar

Similar News