இனி வாட்ஸ் அப்பில் செய்திகளை மட்டுமல்ல - பணத்தை மற்றவர்களுக்கு அனுப்பலாம்.!

இனி வாட்ஸ் அப்பில் செய்திகளை மட்டுமல்ல - பணத்தை மற்றவர்களுக்கு அனுப்பலாம்.!

Update: 2020-11-07 07:00 GMT

வாட்ஸ்அப் பயன்படுத்தி ஒரு குறிப்பு மகிழ்ச்சியான செய்தி களைத் தொடர்ந்து வாட்ஸ்-அப் தரப்பில் அப்டேட் செய்யப்பட்டு வந்தது அந்த வகையில் தற்போது பணம் செலுத்தும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தி இனி கூகிள் பே, பேடிஎம், அமேசான் பே மற்றும் நாட்டில் உள்ள பிற கட்டண சேவைகளைப் போலவே வாட்ஸ்அப்  பயன்படுத்துவோரும் தன்னுடைய பணத்தை வாட்ஸ்அப் மூலமாக மற்றவர்களுக்கு எளிதாக்க  அனுப்ப முடியும். 

முக்கிய சிறப்பம்சங்கள், நீங்கள் இப்போது வாட்ஸ்அப்பில் பணம் அனுப்பலாம் இந்தியாவில் ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கு இந்த அம்சம் கிடைக்கிறது. UPI ஆதரவு பயன்பாட்டைப் பயன்படுத்தி எவருக்கும் பணம் அனுப்பலாம் என்று வாட்ஸ் அப் தரப்பில் கூறப்பட்டுள்ளது. நிறுவனம் 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சுமார் 1 மில்லியன் வாட்ஸ்அப் உபயோகப்படுத்துபவர்கள் இடம் மற்றவர்களுக்கு பணம் அனுப்பும் சேவையை சோதிக்க தொடங்கியது ஆனால் இறுதியாக இப்பொழுதுதான் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டு தற்போது அமலாக்கி உள்ளது.

மேலும் வாட்ஸ் ஆப் வழியாகப் பயனாளர்கள் பணம் அனுப்புவதற்குக் கட்டணம் கிடையாது என பேஸ்புக் தலைமைச் செயல் அலுவலர் மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்துள்ளார். பேஸ்புக் நிறுவனத்தின் கீழ் செயல்படும் வாட்ஸ் ஆப் வழியாகப் பணம் அனுப்புவதற்காக இந்தியாவில் ஒருங்கிணைந்த செலுத்து தளமாக உள்ள NPCI யுடன் உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 2 கோடிப்பேர் NPCI யின் ஒருங்கிணைந்த இந்த அம்சத்தை பயன்படுத்திக் கொள்ள பேஸ்புக் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதியைப் படிப்படியாக விரிவுபடுத்த பேஸ்புக் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், வாட்ஸ் ஆப் வழியாகப் பணம் அனுப்பும் வசதி 140 வங்கிகளின் உதவியுடன் செயல்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Similar News