70 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பங்கேற்கும் மாநாடு: சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழா!
70-வதற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பங்கேற்கும் மாநாடு.
வெளிநாடுவாழ் இந்தியர்தின மாநாடு என்பது இந்திய அரசின் முக்கியமான ஒரு நிகழ்வாகும். வெளிநாடுவாழ் இந்தியர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கான முக்கிய காரணத்தை இது வழங்குகிறது. இந்திய வம்சாவழியினர் ஒருவரோடு ஒருவர் கலந்துரையாடவும் இது வகைசெய்கிறது. மத்தியப்பிரதேச அரசின் பங்களிப்புடன் 17-வது வெளிநாட்டு வாழ் இந்தியர் தின மாநாடு 2023 ஜனவரி 8 முதல் 10 வரை இந்தூரில் நடைபெற உள்ளது. இந்திய வம்சாவழியினர் அமிர்த காலத்தில் இந்தியாவின் வளர்ச்சிக்கு நம்பகமான கூட்டாளிகள் என்பது இந்த மாநாட்டின் மையப் பொருளாகும். இந்த மாநாட்டிற்காக சுமார் 70 நாடுகளைச் சேர்ந்த 3,500-க்கும் அதிகமான இந்திய வம்சாவழியினர் பதிவு செய்துள்ளனர்.
இந்த மாநாடு 3 பிரிவுகளைக் கொண்டிருக்கும். 2023 ஜனவரி 8 அன்று தொடக்க நிகழ்வு வெளிநாடுவாழ் இந்திய இளைஞர்கள் தினமாக நடைபெறும். இதற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் அமைச்சகம் பங்குதாரராக செயல்படும். ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜனிதா மாஸ்கரன்ஹாஸ் இந்த நிகழ்வில் கவுரவ விருந்தினராக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2023, ஜனவரி 9 அன்று 2-ம்நாள் நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைப்பார். சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழா இந்திய விடுதலைப் போராட்டத்தில் இந்திய வம்சாவழியினரின் பங்களிப்பு என்ற மையப் பொருளில் முதல் முறையாக டிஜிட்டல் கண்காட்சியை பிரதமர் தொடங்கிவைப்பார். G20-ன் இந்திய தலைமைத்துவத்தைக் கருத்தில் கொண்டு ஜனவரி 9 அன்று சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Input & Image courtesy: PIB