சமூக ஊடகங்களில் முடிவு: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தான் முதலிடம் !

பதக்கங்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் அமெரிக்காதான் முதலிடம். ஆனால் சமூக ஊடகங்களில் படி, பார்த்தால் இந்தியா முதலிடம்.

Update: 2021-08-12 13:35 GMT

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020 ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் சிறந்த முறையில் நடைபெற்று முடிந்தது. இந்த ஒலிம்பிக் போட்டியில் அதிக பதக்கங்களுடன் அமெரிக்கா முன்னிலை வகித்தது. இந்தியா 48-வது இடத்தில் இருந்தது. ஆனால் இது பதக்கங்களின் அடிப்படையில் மட்டும் தான் இத்தகைய முடிவு. ஆனால் தற்போது சமூக வலை தளங்களான ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராம் போன்றவைகளில் முடிவுகளின் அடிப்படையில், இந்தியா தான் ஒலிம்பிக் போட்டியில் முதலிடம் வகித்து உள்ளது என்று கூறுகிறது. 


அமெரிக்காவையும், பிரேசிலையும் பின்னுக்குத் தள்ளி, ஒலிம்பிக்கின் போது இந்தியா உலகின் முதல் நாடாக மாறியது. சமீபத்தில் முடிவடைந்த டோக்கியோ விளையாட்டு 2020 இல், இந்தியா தனது சிறந்த பிரச்சாரத்தில் மட்டுமல்ல, ஆன்லைனிலும் முன்னெடுத்துள்ளது. குறிப்பாக இந்திய விளையாட்டு வீரர்களுக்கான ஆதரவை இந்திய மக்கள் சமூக வலைதளமான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலமாக அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார். 


குறிப்பாக மக்களுடைய ஆதரவு விளையாட்டு வீரர்களுக்கு இணையதளம் மூலமாக அதிகமாக கிடைத்துள்ளது கவனிக்க வேண்டிய ஒரு விஷயம். பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தகவல்படி, ஒலிம்பிக் தொடர்பான விஷயங்களை இந்திய மக்கள் வலைதளம் மூலமாக தெரிந்து கொண்டுள்ளார்கள். இதன் காரணமாக இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளை முந்தியுள்ளது. அதிலும் குறிப்பாக ஆகஸ்ட் 7ஆம் தேதி ஈட்டி எறிதல் போட்டியில், நீரஜ் சோப்ரா அவர்கள் இந்தியாவிற்கான தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்ததன் வாயிலாக, அவரை பின் தொடர்பவர்கள் மற்றும் அவருக்கு வாழ்த்து செய்திகளை கூறுபவர்கள் 2.8 மில்லியன் மக்களாக உயர்ந்துள்ளார். 

Input: https://indianexpress.com/article/technology/social/tokyo-2020-if-there-was-a-gold-for-being-loudest-during-olympics-india-would-have-got-it-7445791/lite/

Image courtesy:indian express 


Tags:    

Similar News