'சக் தே இந்தியா' படத்தின் காட்சிகள்: ஒலிம்பிக்கில் பதக்கத்தை கைப்பற்றுமா பெண்கள் ஹாக்கி அணி?

ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதியில் முதல்முறையாக முன்னேறிய பெண்கள் ஹாக்கி அணி.

Update: 2021-08-02 12:59 GMT

டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி முதல் முறையாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. குறிப்பாக ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் ஹாக்கி அணி டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி அரையிறுதிச் சுற்றுக்கு முதன் முதலாகத் தகுதி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றிப்  பயணம் தற்பொழுது இந்திய ரசிகர்கள் மனதில் பெரும் உற்சாகத்தைத் ஏற்படுத்துகின்றது. குறிப்பாக 2007 ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் பெரும் வசூலைக் குவித்த 'சக் தே இந்தியா' திரைப்படத்தில் வரும் காட்சிகள்  தோன்றுவதற்கு பல ரசிகர்களும், தற்போது தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு போஸ்ட்களை போட்டுக் கொண்டு வருகிறார்கள். இது தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. 



குறிப்பாக அந்த படத்தில் இந்திய மகளிர் ஹாக்கி அணியை உலகக்கோப்பையை வெல்ல வழிநடத்திச் செல்வார் ஷாருக்கான். அந்தப் படத்திலும் ஆஸ்திரேலியாவை இந்திய மகளிர் அணி வீழ்த்தி கோப்பையை வெல்லும். அதைப்போல தற்பொழுது கால் இறுதிக்கு முன்னேறி உள்ள பெண்கள் ஹாக்கி அணி வெற்றிக் கோப்பையை கைப்பற்றுமா? ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லுமா? என்பதும் பல்வேறு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது என்றும் சொல்லலாம். தற்பொழுது அந்த படத்தை இந்திய மகளிர் ஹாக்கி அணியின் இன்றைய கோச் சோயர்ட் மாரின் மகிழ்ச்சியுடன் அதைப் பற்றி பதிவிட்டுள்ளார். 



பெண்கள் ஹாக்கியில் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி இதுவாகும். ஏனெனில் அணி மூன்றாவது முறையாக ஒலிம்பிக்கில் விளையாடுகிறது மற்றும் நாக்அவுட் சுற்றுக்கு போராடியது. A பிரிவில் நான்காவது இடத்தைப் பிடித்தது. இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறிய உடனே சமூக ஊடகங்கள் வாழ்த்து பதிவுகளால் பாராட்டப்பட்டது குறிப்பாக #ChakDeIndia ட்விட்டரில் சிறந்த ஹஸ்டக்கில் ஒன்றாக மாறியது என்று சொல்லத் தேவையில்லை. 

Input: https://www.indiatvnews.com/trending/offbeat-twitterati-reminded-of-srk-s-chak-de-india-as-women-s-hockey-team-reaches-tokyo-olympics-semi-finals-723702

Image courtesy: indiatv news 


Tags:    

Similar News