ராணுவ வீரர்கள் கொண்டாடிய இந்தியாவின் தங்க மகன்: வைரலாகும் வீடியோ !

ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இந்தியாவின் தங்க மகனை கொண்டாடிய ராணுவ வீரர்கள்.

Update: 2021-08-08 13:01 GMT

ஒலிம்பிக்கின் இறுதிப்போட்டியில், உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளார் நீரஜ் சோப்ரா. டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றுள்ள நீரஜ் சோப்ரா பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகி உள்ளார்.vஇந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான முதல் தங்கம் வாங்கி கொடுத்தவர், இந்திய ஒலிம்பிக் வரலாற்றிலேயே தடகள போட்டியில் முதல் தங்கம் வாங்கி கொடுத்தவர். 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் தங்கம் பெற்று கொடுத்தவர் என்ற சாதனை தற்போது நீரஜ் சோப்ராவிடம் உள்ளது.




நீரஜ் சோப்ரா இந்திய ராணுவத்தில் பணி புரிந்துவருவதால், அவரது சாதனையை ராணுவ வீரர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள CRPF வீரர்கள், தேசியக் கொடிகளை அசைத்தும் வாழ்த்து கோஷங்கள் எழுப்பியும் கொண்டாடினர். "ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ராவின் தங்க வெற்றி இந்திய இராணுவத்திற்கு பாராட்டுக்களைத் தருகிறது" என்றும் இராணுவம் அவரை பாராட்டியது. எனவே ராணுவ வீரர்கள் அவரைப் பாராட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெகுவாக வைரலாகி வருகிறது. 


பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் நீரஜ் சோப்ராவை வெகுவாக பாராட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. "ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ராவின் பொன்னான வெற்றி இந்திய இராணுவத்திற்கு பாராட்டுக்களைத் தருகிறது. அவர் ஒலிம்பிக்கில் ஒரு உண்மையான சிப்பாய் போல் நடித்தார். இந்திய ஆயுதப்படைகள் உட்பட முழு நாட்டிற்கும் இது ஒரு வரலாற்று மற்றும் பெருமைமிக்க தருணம்" என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். மேலும் இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் M.M.நரவனே மற்றும் இந்திய இராணுவத்தின் அனைத்து பிரிவுகளும் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.  

Input: https://www.aninews.in/videos/national/watch-jawans-of-rajputana-rifles-celebrate-neeraj-chopras-olympic-gold/

Image courtesy: aninews


Tags:    

Similar News