தங்கம் வென்ற தங்கமகனுக்கு கௌரவம்: முக்கிய முடிவை எடுத்த இந்திய தடகள சம்மேளனம் !

ஆகஸ்ட் 7ஆம் தேதி ஈட்டி எறிதல் தினமாக அனுசரிக்கப்படும் இந்திய தடகள சம்மேளனத்தின் முடிவு.

Update: 2021-08-11 13:43 GMT

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த போட்டியில் இந்தியா 48வது இடத்தில் உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவை கௌரவிப்பதற்காக ஆகஸ்ட் 7-ஆம் தேதி ஈட்டி எறிதல் நாள் என்று பெயரிட இந்தியா தடகள சம்மேளனம் முடிவு செய்துள்ளது. இந்தியாவிற்காக தங்கம் வென்ற தங்க மகனின் வெற்றிக்கு உரிய நாளை குறிக்கும் விதமாக இந்த நாள் அனுசரிக்கப்பட்ட உள்ளது. இந்த விஷயம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 



மேலும் இதுகுறித்து இந்திய தடகள சம்மேளத்தின் திட்டக் குழு தலைவர் லலித் பனோட் கூறுகையில், இந்த விளையாட்டை ஊக்குவிக்கும் முயற்சியாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 அன்று இந்தியா முழுவதும் ஈட்டி எறிதல் போட்டிகள் நடத்தப்படும் என்று கூறினார். இந்தியாவின் இளம் பயிற்சியாளர்களை ஈட்டி எறிதல் போட்டிகளுக்கு ஈடுபடுத்தும் வகையில் இத்தகைய முடிவுகள் அமைந்துள்ளன. இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆகஸ்ட் 7ம் தேதிஅன்று நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் 87.58 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். 


ஒலிம்பிக் வரலாற்றில் தடகள போட்டிகளில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றிக்குப் பின்னர், பரிசு மழையில் திக்குமுக்காடும் நீரஜ் சோப்ரா சொகுசு கார் முதல் கோடிக்கணக்கில் ரொக்கம் வரை 11 ஆயிரம் வீரர்களும், 200 நாடுகளும் கலந்துகொண்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 4 நான்கு வெண்கல பதக்கங்கள் என 7 பதக்கங்களுடன், பதக்கப்பட்டியலில் 48வது இடத்தை பிடித்து உள்ளது என்பதும் இந்தியர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விஷயமாக அமைந்துள்ளது. 

Input: https://www.latestly.com/socially/sports/athletics-federation-of-india-decides-to-name-august-7-as-javelin-throw-day-to-honour-neeraj-chopra-2730417.html

Image courtesy:sport news 


Tags:    

Similar News