ஒலிம்பிக் போட்டியில் ஹிந்தி பாடலுக்கு நடனமாடிய இஸ்ரேல் நீச்சல் வீராங்கனைகள் !

பாலிவுட் நடிகை மாதுரி தீக்‌ஷித்தின் புகழ்பெற்ற 'ஆஜா நச்லே' பாடலுக்கு இஸ்ரேல் வீராங்கனைகள் இருவரும் நடனமாடி அசத்தியுள்ளனர்.

Update: 2021-08-06 13:19 GMT

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பல நாடுகளில் இருந்து வந்துள்ள விளையாட்டு வீரர்கள் தங்களின் திறமைகளை நிரூபித்து வருகின்றனர். நீச்சல் போட்டிகளில் பாடலுக்கு நீரில் இருந்து நடனமாடும் போட்டிகளும் ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ளது. இதில் தற்பொழுது இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஏடன் ப்ளேச்சர் மற்றும் ஷெல்லி போப்ரிட்ஸ்கை ஆகியோர், மாதுரி தீக்‌ஷித் நடிப்பில் வெளியான படத்தில் இடம் பெற்ற "ஆஜா நச்லே" பாடலுக்கு நடனமாடி தங்களின் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.  



தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக இந்தப் பாடலின் மூலம் இந்தியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே உள்ள நட்பினை பாராட்டும் வகையில் இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகமும் இந்த வீடியோவை தங்களின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, இஸ்ரேல் பாலிவுட்டை மிகவும் விரும்புகிறது என்றும் குறிப்பிட்டு இருந்தது. அதற்கு மாதுரி தீக்‌ஷித்ன் பாடலுக்கு நடனமாடும் ஏடன் ப்ளேச்சர் மற்றும் ஷெல்லியின் நடனம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும் என்று கூறியுள்ளது. 




உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் மொழிகளைக் அறிந்து கொள்வதற்கு அதிக ஆர்வம் கொண்டுள்ளார்கள். அந்த வகையில் ஹிந்தியில் இடம்பெற்றுள்ள இந்த பாடலுக்கு இஸ்ரேலைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனைகள் தண்ணீரும் நடனமாடியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களின் வாழ்த்துகளை இஸ்ரேல் அணிக்கு தெரிவித்ததோடு மட்டுமின்றி, பலரும் மாதுரி தீக்‌ஷித்தை இந்த வீடியோவை பார்க்கும் படி டேக் செய்தும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Input: https://indianexpress.com/article/trending/trending-in-india/tokyo-olympics-israeli-swimmers-perform-on-madhuri-dixits-aaja-nachle-7438321/

Image courtesy: indian express news  


Tags:    

Similar News