186 ஆண்டுகள் பழமையான உயிரியல் பூங்கா: நிரந்தரமாக மூட காரணம் என்ன?
உலகின் மிகவும் பழமையான பிரிஸ்டல் ஜூ கார்டன்ஸ் உயிரியல் பூங்கா இந்த வருட இறுதியில் நிரந்தரமாக மூடப்பட உள்ளது.
UK-வில் மிகவும் பிரபலமான 186 ஆண்டுகள் பழமையான உயிரியல் பூங்கா என்று அழைக்கப்படும் பிரிஸ்டல் ஜூ கார்டன்ஸ் உயிரியல் பூங்கா இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் நிரந்தரமாக மூடப்பட உள்ளது. கிளிஃப்டனில் அமைந்துள்ள பிரிஸ்டல் ஜி கார்டன்ஸ் உயிரியல் பூங்கா 1836ம் ஆண்டிலிருந்து மக்களின் பயன்பாட்டிற்கு செயல்படத் தொடங்கியுள்ளது. அன்றைய தினம் தொடங்கிய தன்னுடைய பயணத்தை தற்போது வரை முழுமையாக செய்துள்ளது. இந்த பூங்கா இதுவரை 90 மில்லியனுக்கு அதிகமான பார்வையாளர்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உலகில் மிகப் பழமையான உயிரியல் பூங்காக்களில் இதுவும் ஒன்று.
இந்தப் பூங்கா குறிப்பாக 12 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இதுவரை 700க்கும் மேற்பட்ட அரிய வகை உயிரினங்களை வாழ்வளிக்கும் பூங்காவாகும் இது விளங்குகிறது. இந்தப் பூங்கா தான் வருகின்ற செப்டம்பர் மாதத்தில் முதல் நிரந்தரமாக மூடப்பட இருக்கிறது. இந்நிலையில் தலைமை நிர்வாகி டாக்டர் ஜஸ்டின் மோரிஸ் பேசுகையில், "பிரிஸ்டல் ஜூ கார்டன்ஸ் பல மக்களுக்கு ஒரு சிறப்பு இடமாகும். மேலும் எங்கள் விலங்குகள் மற்றும் தோட்டங்களைப் பார்க்கவும், அவர்களின் நினைவுகளைப் பற்றி பேசவும் அவர்களுக்கு ஒரு வாய்ப்பளிக்க விரும்புகிறோம்" என்று கூறினார்.
மேலும் இந்த பூங்காவிற்கு முக்கிய காரணம் நோய்தொற்று ஊரடங்கு தான் என்று சொல்லவேண்டும். ஏனெனில் ஊரடங்கு காலத்தில் நீண்ட காலமாக பூட்டப்பட்டிருந்த இந்த பூங்காவிற்கு பெருமளவில் நட்டம் ஏற்பட்டு அதன் காரணமாகத்தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. முன் எப்போதும் இல்லாத வகையில் இங்கு நடைபெறும் தொழில்கள் அனைத்தும் நட்டத்தல் சென்றதன் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பூங்கா மூடப்பட்டதற்கு பிறகு அங்குள்ள விளையாட்டு திடல் மற்றும் சிறுவர் பூங்கா போன்ற இடங்களில் மட்டும் பார்வையாளர்கள் அனுமதிக்கப் படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
Input & Image courtesy: News 18