வேலையை காட்டும் பாகிஸ்தான்... முதல் எச்சரிக்கை மணியை விடுத்த இந்தியா!
இந்தியாவில் இருந்து ஆயுதங்களுடன் கடத்தலில் ஈடுபட்ட பாகிஸ்தானை சேர்ந்த மர்ம ட்ரோன்.
பாகிஸ்தானில் இருந்து தற்போது மர்ம முறையில் நவீன ஆயுதங்களுடன் கூடிய ட்ரோன் இந்தியாவின் எல்லை பகுதிகளில் பறந்து வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக இங்கிருக்கும் ஆயுதங்களை திருடி செல்வதற்கும் இத்தகைய நவீன ட்ரோன்களை பாகிஸ்தான் தீவிரவாதிகள் பயன்படுத்தி வருவதாகவும் உளவுத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அந்த வகையில் காஷ்மீரில் சம்பா மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லையில் மர்ம பெட்டி ஒன்று கிடைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் அங்கு முன்னெச்சரிக்கையாக வெடிகுண்டு இருக்கிறதா? என்று தடவியில் நிபுணர்கள் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று இருந்தார்கள். குறிப்பாக அந்த பெட்டியின் அருகில பல்வேறு சோதனைக்குப் பிறகு அதனை திறந்து பார்த்த பொழுது அதில் மூன்று கை துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இது பறிமுதல் செய்யப்பட்டு அந்த துப்பாக்கிகள் தற்போது போலீஸ் விசாரணையின் கீழ் உள்ளது. பயங்கரவாதிகளுக்கான ட்ரோன்களில் சர்வதேச எல்லைக்கோட்டை கடந்து வான் வழியாக இது வீசப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டு இருக்கிறது. தொடர்ச்சியாக இந்த ஒரு மாதக் காலகட்டங்களில் மட்டும் பல்வேறு வகையான தீவிரவாத நடவடிக்கைகளை பாகிஸ்தான் இந்தியாவிற்கு செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Polimer News