இந்து கோவிலை தாக்கும் இஸ்லாமிய சிறுவர்களின் வீடியோ: பாகிஸ்தானில் நடப்பது என்ன?

பாகிஸ்தானில் இந்து கோவில் மீது சிலர் தாக்குதல் நடத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

Update: 2021-08-07 13:22 GMT

பாகிஸ்தானில் குறிப்பாக இந்து மக்கள் சில சதவீதம் பேர் மட்டும் தான் வசிக்கிறார்கள். குறிப்பாக அங்குள்ள மொத்த மக்கள் தொகையில் 2% மட்டுமே இந்து மக்கள். எனவே அவர்கள் அங்குள்ள பிற மதங்களுக்கும் எதிரான செயல்களில் ஈடுபடும் பொழுது அவர்களது கடுமையான தண்டனைகள் கொடுக்கப்படுகின்றது. குறிப்பாக மரண தண்டனை கூட விதிக்கப்படுகிறது. அந்த வகையில் தற்பொழுது பாகிஸ்தானில் கிழக்கு பஞ்சாப் மகாணத்தில் இருக்கும் இந்து கோவில் மீது குண்டர்கள் சிலர் தாக்குதல் நடத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இந்து கோயில் தாக்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு எட்டு வயது இந்துச் சிறுவன் ஒருவன் அங்குள்ள மதப் பள்ளியை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடுகிறது. எனவே அதற்காக அந்தச் சிறுவன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தற்பொழுது அவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு வெளியில் வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக எதிர்ப்பைக் காட்டும் விதமாக இந்து கோயில்களை தகர்க்கும் செயல்களில் சில இஸ்லாமிய சிறுவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்து தகவல் கிடைத்ததும் நிலைமையை கட்டிற்குள் கொண்டுவர அங்கு போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர். 

ஆனால் போலீசார் அங்கு வருவதற்குள் இந்து கோவிலை குண்டர்கள் சிலர் அடித்து நொறுக்கி உள்ளனர். இந்த வீடியோவை சபாஸ் கில் என்பவர் தனது ட்டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரஹிம் யார்கான் மாவட்டத்தில் இருக்கும் இந்து கோவிலை அடித்து நொறுக்கிய சிலர் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். எனவே அந்தச் சிறுவனை மீண்டும் கைது செய்யக்கோரி தற்பொழுது அங்கு போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. 

Input: https://www.nationalheraldindia.com/international/20-people-arrested-over-150-booked-in-pakistan-for-attack-on-hindu-temple

Image courtesy: nationalheraldindia  


Tags:    

Similar News