பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் தாக்கப்பட்ட இந்து மாணவர்கள்: நடந்தது என்ன?
பாகிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.
பாகிஸ்தான் கராச்சி பல்கலைக்கழகத்தில் உள்ள சிந்தி மொழி துறையில் பல்வேறு இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். குறிப்பாக பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் வெவ்வேறு மாநிலங்கள் அல்லது வெவ்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்களாக இருக்கலாம். அவரவர்களுக்கு என்று தனி அடையாளம் மற்றும் அவர்கள் நாட்டுக்கு என்று தனி கலாச்சாரம் இருக்கிறது என்பதை எப்பொழுதும் பல்கலைக்கழகம் மறந்து விடக்கூடாது. குறிப்பாக அவர்களுடைய கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
ஆனால் அப்படி இல்லாமல் தற்பொழுது பாகிஸ்தானில் ஹோலி பண்டிகை கொண்டாடிய இந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. குறிப்பாக சிந்துமொழி துறையில் இந்து மாணவர்கள் சிலர் நேற்று ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவி ஹோலி பண்டிகைகளை கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அங்கு வந்த மற்றொரு மாணவர் மற்றும் அவருடன் கூட்டாக சேர்ந்து அனைத்து மாணவர்களும் சிறுபான்மை மாணவர்களை தாக்கி இருக்கிறார்கள்.
குறிப்பாக பல்கலைக்கழகத்தில் சில குறிப்பிட்ட ஹிந்து மாணவர்கள் படித்து வருகிறார்கள். எனவே அவர்கள் ஹோலி பண்டிகை கொண்டாடியதற்கான தாக்கப்பட்டு இருக்கிறார்கள். இது குறித்து ஒரு ஹிந்து மாணவி தன்னுடைய ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த தங்களை தாக்கியதாகவும், மாணவிகளை துன்புறுத்தியதாகவும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ள பல்கலைக்கழகத்தின் அலுவலர் இது குறித்து விசாரிப்பதாகவும் கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: Dinamalar