பழனி கோவிலில் முடிக்காணிக்கை செலுத்த கட்டணம்: போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள்?
முடி காணிக்கை செலுத்த கட்டணம் கேட்டதால் பக்தர்கள் கோவிலில் திடீர் போராட்டம்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் தான் பழனி முருகன் கோவில் இருந்து வருகிறது. இந்த கோவில்கள் குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் எந்த ஒரு கோவில்களிலும் பக்தர்கள் கட்டணம் இல்லாமல் முடி காணிக்கை செலுத்தலாம் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கருப்பூர் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வருகை தந்து இருக்கிறார்கள். பிறகு அங்கு கோவில் பகுதிகளில் உள்ள முடி காணிக்கை செலுத்தும் நிலையத்திற்கு சென்றார்கள்.
அப்போது அங்குள்ள தொழிலாளர்கள் முடி காணிக்கை செலுத்த பணம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்காக பக்தர்கள் பணம் கொடுக்க மறுத்தனர். ஆனாலும் பணம் கொடுக்க வேண்டும் என்று அங்கிருந்து தொழிலாளர்கள் வற்புறுத்தியதாக தெரிய வருகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பக்தர்கள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
இது குறித்து தகவல் அறிந்து பழனி கோவில் அலுவலக மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருக்கிறார்கள். பின்னர் பக்தர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமரசத்தில் ஈடுபட்டார்கள். முடி காணிக்கை செலுத்த தொழிலாளர்களிடம் பணம் கேட்டது குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகரிக்கும் உறுதி அளித்து இருக்கிறார்கள்.
Input & Image courtesy: Maalaimalar