பாரா ஒலிம்பிக் நட்சத்திரங்களுக்கு பிரதமர் கொடுத்த விருந்தோம்பல் வீடியோ !
பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு பிரதமரை கொடுத்து விருந்தோம்பல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டி நடந்தது. இதில் அசத்திய இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் உட்பட 19 பதக்கங்கள் வென்றது. எனவே பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு நட்சத்திரங்களுக்கு பிரதமர் மோடி, தனது வீட்டில் சமீபத்தில் விருந்து கொடுத்து கவுரவித்தார். அப்போது ஒவ்வொருவரும் பாராலிம்பிக் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இதன் சிறப்பு வீடியோ ஒன்றை நேற்று டுவிட்டரில் பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாட்டுக்காக பதக்கம் வென்ற வீராங்கனை களுடன் பிரதமர் மோடி பேசுகையில், "உங்களிடம் இருந்து உத்வேகம், ஊக்கம் பெறுகிறேன். அதுவே பெரிய சாதனை தான். நீங்கள் செய்யும் சிறிய விஷயம் கூட நாட்டு மக்களுக்கு ஊக்கம் அளிக்கும். உங்கள் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு சென்று குழந்தைகளுக்கு ஊக்கம் தரலாம். விளையாட்டை தவிர வேறு வழிகளிலும் நாட்டுக்காக ஏதாவது செய்யலாம். நல்ல மாற்றத்தை விதைக்கலாம். நீங்கள் நாட்டுக்காக செய்யவேண்டியது இன்னும் ஏராளம் இருக்கிறது.
உங்களால் இந்திய மண்ணில் விளையாட்டு கலாசாரம் வளர்ச்சி அடையும். நீங்கள் அனைவரும் நாட்டின் துாதர்கள். உங்களது சிறப்பான செயல்பாட்டின் மூலம் உலக அரங்கில் நாட்டின் கவுரவத்தை உயர்த்தியுள்ளீர்கள். கடின உழைப்பு காரணமாக, அனைவரும் அறியும் நட்சத்திரங்களாக உருவெடுத்துள்ளீர்கள். உங்கள் மன உறுதியை பாராட்டுகிறேன். உங்களது எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. உங்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.
Input & Image courtesy Twitter