விமானத்தை பயணிகள் இறங்கி தள்ளும் காட்சி: வைரலாகும் வீடியோ !

விமான ஓடுதளத்தில் பழுதாகி நின்ற விமானத்தை பயணிகள் இறங்கிவந்து தள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Update: 2021-12-06 14:08 GMT

இந்தியாவில் குறிப்பாக இந்தியர்களை பொறுத்த வரையில் பல்வேறு வாகனங்கள் பழுது அடைந்து விட்டால் அவர்கள் வாகனங்களிலிருந்து இறங்கி பின் பிறகு வாகனத்தை சரி செய்வார்கள் இது பொதுவான ஒன்றாக அறியப்படும். சாலைகளில் பயணிப்போர் பழுதடைந்து நிற்கும் பைக், கார் போன்ற இலகுரக வாகனங்களையும் பேருந்து, லாரி போன்ற கனரக வாகனங்களையும் தள்ளிச் செல்லும் காட்சிகளை நாம் பொதுவாக பார்த்திருக்க முடியும். பேருந்துகள் பிரேக் டவுன் ஆகி நின்றுவிட்டால், அதில் பயணித்த பயணிகளை நடத்துனர் அழைத்து பேருந்தை தள்ளச் செய்யும் சம்பவங்களை பார்க்காதவர்கள் இருக்க முடியாது. ஆனால் விமானத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தது இல்லை. ஆனால் தற்பொழுது விமானத்திலிருந்து பயணிகள் இறங்கி விமானத்தை தள்ளும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


உண்மையில் விமானம் ஒன்று பழுதாகி ரன்வேயில் நின்றுவிட அதனை பயணிகள் இறங்கி வந்து தள்ளியிருக்கின்றனர். நேபாள நாட்டின் கோட்லி எனும்இது பகுதியில் அமைந்துள்ள பஜுரா விமான நிலையத்தில், தாரா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று தரையிறங்கிய நிலையில் திடீரென அந்த விமானத்தின் பின்புற டயர் ஒன்று வெடித்திருக்கிறது. டயர் வெடித்ததால் விமானமானது அந்த இடத்தை விட்டு நகர முடியாமல் ரன்வேயில் அப்படியே நின்றுவிட்டது.




அந்த விமானத்தில் இருந்த பயணிகளும், ஊழியர்களும் இறங்கிவந்து விமானத்தை ரன்வேயில் இருந்து தள்ள உதவினர். சுமார் 20 நபர்கள் சேர்ந்து அந்த விமானத்தை கஷ்டப்பட்டு தள்ளி பத்திரமாக ரன்வேயில் இருந்து பார்க்கிங் பகுதிக்கு கொண்டு சென்றனர். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

Input & Image courtesy:News 18


Tags:    

Similar News