சாலையோர பெண் வியாபாரியை தாக்கிய கோவில் இணை ஆணையர் - மக்கள் முற்றுகை போராட்டம்!
சாலையோர பெண் வியாபாரியை தாக்கியதாக பழனி கோவில் இணை ஆணையர் அலுவலகம் முன்பு மக்கள் போராட்டம்.
பழனி கோவிலுக்கு தற்போது ஐயப்பன் சீசனாக இருப்பதால் தினம் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து வருகிறார்கள். இவ்வாறு வரும் பக்தர்களுக்கு இடையூறாக அடிவாரம், கிரிசன்னதி வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலை கடைகள் அதிக அளவில் இருந்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களை மிரட்டி பல்வேறு பொருட்களை வாங்க முயற்சிப்பதாகவும் புகார் எழுந்து வந்தது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பிட்ட எல்லைக்கு மேல் கடை வைத்து இருப்பவர்களை கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.
பழனி கோவில் இணை ஆணையர் லட்சுமி என்பவர் பார்வையிட்டார். அவரிடம் ஆக்கிரமிப்பு அகற்ற முடியாது என்று வியாபாரிகள் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார்கள். அப்பொழுது இருதரப்பினர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சாலையோர வியாபாரி பூவாயி என்பவரை இணை ஆணையர் தாக்கியதாகவும் குறிப்பிடுகிறது. இதனால் வியாபாரிகள் அனைவரும் இணை ஆணையர் லட்சுமியை முற்றுகையிட்டனர். அவரை போலீசார் பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்து சென்றனர். ஆணையர் பணி செய்யும் அலுவலகத்திற்கு வந்த பொழுதிலும் வியாபாரிகள் அவர்களை பின்தொடர்ந்து வந்து அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
அவர்களிடம் இது பற்றி கேட்கும் பொழுது நான் யாரையும் தாக்கவில்லை என்று விளக்கம் அளித்திருக்கிறார். இருந்தபோதும் பூவாயி என்பவர் தனது கழுத்தில் இருந்த கயிறை பிடித்து இழுத்து கன்னத்தில் அறிந்ததாக கூறினார். இதனால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது, போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை சமரசம் செய்ய முயற்சி இருந்தாலும் பொதுமக்கள் கேட்கவில்லை. இதனால் பழனி கோவில் இணை ஆணையர் அலுவலகம் முன்பு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: Maalaimalar