துருக்கி சிரியா நாடுகளில் நிலநடுக்கம்: மீட்பு பணிக்கு உதவிய இந்தியா!
சிரியா, துருக்கி ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் காரணமாக இந்தியா மீட்பு பணிக்கு உதவி இருக்கிறது.
துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதிகளில் சிரியாவின் எல்லையை ஒட்டி தற்பொழுது நீலொடுக்கம் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலநடுக்கம் காரணமாக முதலில் ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தை தொடர்ந்து 20 முறை கடுமையான நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதிகாலை நேரம் என்பதால் பெரும்பாலான மக்கள் தூக்கத்தில் இருந்திருக்கிறார்கள். தூக்கத்திலிருந்து விழித்தவருக்குள் கட்டிடங்கள் தரைமட்டமானதால் நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிபோய் இருக்கிறது.
மலை போல் குவிந்து இருக்கும் கட்டிட இடைப்பாடுகளில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கி இருக்கும் நிலையில் அவர்களை மீட்பதற்கு ஆயிரக்கணக்கான மீட்டு குழுவினர்களும் இறங்கி மீட்பு பணிகளில் ஈடுபட்டு துரிதமாக அவர்களை வீட்டு வருகிறார்கள். இந்த பகுதிகளில் மீட்பு பணியில் தற்பொழுது இந்தியாவும் களம் இறங்கி உதவி செய்து இருக்கிறது. மேலும் இந்த துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு இந்தியா உதவி கரம் நீட்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் அதனை தொடர்ந்து துருக்கிக்க தேவையான உதவிகளை தொடர்ந்து வழங்குவதாகவும் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரின் முதன்மை செயலாளர் தற்பொழுது ஆலோசனை கூட்டம் நடத்தி முடிவு செய்து இருக்கிறார். சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். சிரியா நாட்டு மக்களின் துயரத்தில் பங்கேற்று இந்த துயரமான தருணத்தில் அவர்களுக்கு உதவியும், ஆதரவையும் அளிக்க நாங்கள் உறுதிப்பூண்டுள்ளோம் என்று மோடி கூறியுள்ளார்.
Input & Image courtesy: PIB