மகளிர் சக்தி இயக்கம் பற்றி பிரதமர் கூறியது என்ன?

நிதி ஆயோக்கில் பிரதமர் பொருளாதார நிபுணர்களோடு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

Update: 2023-01-16 01:17 GMT

நிதி ஆயோக்கில் பொருளாதார நிபுணர்களோடு நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அந்த நிகழ்ச்சியின் கருப்பொருளானது "இந்தியாவின் வளர்ச்சி மற்றும் உலகளவிலான பிரச்னைகளில் இருந்து மீள்வது தொடர்பான நடவடிக்கைகள்" ஆகும். பிரதமர் தமது உரையில், பிரச்சனைகள் இருந்தாலும் அதிலிருந்து மீள்வதற்கு புதிய பன்முகத்தன்மை கொண்ட வாய்ப்புகள் குறிப்பாக டிஜிட்டல், எரிசக்தி, சுகாதாரம் மற்றும் வேளாண்மை துறைகளில் இருந்து வருவதை சுட்டிக்காட்டினார்.


இந்த வாய்ப்புகளை அரசு மற்றும் தனியார் துறையினர் இணைந்து பயன்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும், புத்தாக்க சிந்தனையுடன் சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்றும் பிரதமர் கூறினார். இந்தியாவின் டிஜிட்டல் துறையின் வெற்றி குறித்து பாராட்டுத் தெரிவித்த பிரதமர், நாடு தழுவிய அளவில் மிகச் சிறந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை உருவாக்கும் திறனை அடையவேண்டும். குறிப்பாக மகளிர் சக்தி இயக்கம் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது என்று கூறிய பிரதமர், பெண்களின் பங்களிப்பை மேலும் ஊக்குவிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.


சர்வதேச சிறுதானிய ஆண்டையொட்டி, சிறுதானியங்களின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும், மேலும் அதன் விளைவாக கிராமப்புற மற்றும் வேளாண் துறையை மேம்படுத்த முடியும் என்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதித்தனர். வேளாண் துறை முதல் உற்பத்தித்துறை வரை பல்வேறு மாறுபட்ட தலைப்புகளில் பிரதமருடன் பங்கேற்பாளர்கள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். உலக அளவில் பிரச்சினைகள் தொடரும் நிலையில், அதிலிருந்து மீ்ள்வதற்கான இந்தியாவின் முயற்சிகளை மேம்படுத்தும் மிக முக்கிய ஆலோசனைகளும் விவாதிக்கப்பட்டது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News