பிரதான் மந்திரி கிஷான் யோஜனா: பயனடைந்த 11.4 கோடி விவசாயிகள்!
பிரதம மந்திரி கிஷன் யோஜனா திட்டத்தின் மூலமாக இந்தியா முழுவதும் 11.4 கோடி விவசாயிகள் பயனடைந்து இருக்கிறார்கள்.
நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தன்னுடைய பட்ஜெட்டை தற்போது சமர்ப்பித்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியாவின் பொருளாதார நிலைமை பற்றி அவர் எடுத்து கூறி இருக்கிறார். குறிப்பாக இந்தியாவின் பட்ஜெட் தாக்கலில் இந்தியா மட்டும் இல்லாது உலக நாடுகளும் உற்று நோக்குகிறது. 11.4 கோடி விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் நேரடியாக உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசாங்கமாக அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக அவர்களுக்கு நேரடியாக வங்கி கணக்கின் மூலம் பல்வேறு உதவி தொகைகள் பிரதான் மந்திரி கிஷான் யோஜனா என்ற திட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. கோவிட் பெருந்தொற்றின் போது, ஒருவரும் பட்டினியுடன் தூங்கச் செல்லக்கூடாது என்பதற்காக, 28 மாதங்கள் சுமார் 80 கோடி பேருக்கு உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.