பிரதமர் அணிந்து வந்த தமிழ்நாட்டில் தயாரான கோட் - சிறப்பம்சம் என்ன?
பிரதமர் நாடாளுமன்றத்திற்கு அணிந்து வந்த உடை மறுசுழற்சி பிளாஸ்டிக் பாட்டில்களால் உருவானது.;
பிரதமர் மோடி அவர்கள் நேற்று நாடாளுமன்றத்திற்கு அணிந்து வந்த நீல நிற கோட் தற்பொழுது அனைத்து மக்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து இருக்கிறது. குறிப்பாக அந்த கோட் இந்திய எண்ணெய் ஆய்வுக் கழகம் பரிசளித்ததாகும். அந்த உடையில் அப்படி என்ன விஷேச சிறப்பம்சம் இடம் பெற்றிருக்கிறது என்றுதானே நீங்கள் யோசிக்கிறீர்கள்? ஆமாம்! சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத உடை என்று அதை கூறலாம். குறிப்பாக மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களால் உருவானது.
இந்த கோட் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களால் மறுசுழற்சி செய்வதன் மூலம் கிடைக்கும் மூலப்பொருளில் இருந்து தயாரிக்கப்பட்டது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? உண்மையில் அதுதான். ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை ஒழிக்குமாறு பிரதமர் மோடி அவர்கள் விடுத்த வேண்டுகோளின் பெயரில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பெட் பாட்டில்களை மறுசுழற்சி செய்து அதன் மூலம் உருவானது தான். இந்த உடையை தனது ஊழியர்கள் மற்றும் சிலிண்டர் விநியோகிக்கும் பணியாளர்களுக்கு இந்திய எண்ணெய் கழகம் சீருடை தயாரித்து வருகிறது. ஒரு சீருடை தயாரிக்க 28 பாட்டில்கள் பயன்படுத்தப்படுகிறது.
அன்பேட்டில் திட்டத்தின் கீழ் இது தயாரிக்கப்படுகிறது. சீருடைகளை பிரதமர் மோடி கடந்த ஆறாம் தேதி பெங்களூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகப்படுத்தினார். அப்பொழுது தான் இந்த விசேஷ உடை பிரதமருக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டு இருக்கிறது. காலை மாநிலங்களவைக்கு வந்த பொழுது, மாலை தனது உரையின் போது அந்த உடையை பிரதமர் அணிந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & image courtesy:Livemint